உறவாக வந்ததால்
உருவான காதல்
வினையாக மாறி
விளையாடுது அவள் வாழ்வில்...
கர்வமே கொண்ட அவள்
கண்ணில் பட்ட அவன்
உருவத்தை பார்த்து
உள்ளத்தை கொடுத்தாள்
அன்பை பொழிந்து
அல்லும் பகலும் மகிழ்ந்து
இன்பம் சுமக்க வைத்த அவன் - இன்று
இன்னல் விளைவித்தே
விலை கோரி நிற்கின்றான் - அவன்
வீசிட்ட வலையிலே
வீழ்ந்த அவள் வாழ்விற்கு....
லட்சங்கள் கொடுத்து விட்டால்
இலட்சணமாய் கை பிடிப்பேன்
இல்லையெனில்
வெட்டியே விட்டுவேன்
வேறொருவன் கை பிடித்து
சென்று விடு..
உதிரத்தில் உருவான
உறவென்பதால்-அவன்
உள்ளத்து ஊணத்தை உணராமலே
உள்ளத்தை கொடுத்தவள் - அவன்
உரைதிட்ட வார்த்தையினால்
உணர்வுகள் சிதைந்து
உதிரமே விழி நீராக
உதடுகள் ஊமையாகி
உளநிலை அற்றவளாய்
உலா வருகிறாள் ஊர் மத்தியிலே?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//உதிரத்தில் உருவான
உறவென்பதால்-அவன்
உள்ளத்து ஊணத்தை உணராமலே
உள்ளத்தை கொடுத்தவள்//
//உதிரத்தில் உருவான
உறவென்பதால்-அவன்
உள்ளத்து ஊணத்தை உணராமலே
உள்ளத்தை கொடுத்தவள்//
ஒ வலிக்கும் கவிதை.....
நாஞ்சில் மனோ நன்றிகள்...
ஆம்,
வலிகள் தவிர்த்து
ஒளிகள் நிறைந்த
வழியில் பெண்கள்
நாளை பயனிக்க-இவள்
விழி நீர் இன்று......
Post a Comment