RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அன்பின் ஆழம்......

அடுத்து அடுத்து ஆண்டுகள்
பல கடந்த போதிலும்
அரும்பி வரும் சந்ததியும்
அறியுதில்லை இந்த
அன்பின் ஆழமதை....

ஆறறிவு கொண்டே
அற்புதங்கள் பல நிகழ்த்த
அகிலமதில் அவதாரித்த
ஆண்டவனின் குழந்தைகள் நாம்...

தாய்க்கு வருகிறது
தன் குழந்தை என்பதால் அன்பு
தந்தைக்கு தொடருது
தன் உதிரம் என்பதால் உறவு...

ஒரு வயிறறில் பிறந்ததனால்
உருவான சொந்தம்
உடன் பிறப்பு...

உரிமையை தனதாக்கி
உறவினை எதிர்பார்த்து
உருவான பந்தத்தில்
இனைந்திட்ட இரு இதயங்கள்
கணவன் மனைவி...

ஏற்றங் கண்டிடவே
எதிர்பார்பு பலகொண்டே
எல்லைகள் பல தாண்டி
ஏமாந்த உறவென்றை
ஏற்றிட்டேன் நன்பனாய்...

வதந்திகளைக் கண்டிங்கே
வாக்கு வாதம் கொண்டே நான்
வர்ணஜலம் கொண்ட
வாழ்க்கை பாதையிதை
வர்ணிக்க முணையவில்லை...

வாசல்படி தடக்கியதற்காய்
வாழும் இல்லமதை
வேண்டாமென விட்டுவிட்டு
வேறு மனை செல்வதுவா?

படிக்கல்லை பார்ந்தே நாம்
பக்குவமாய் கடந்து வந்தால்
கவலை மறந்தே நாம்
காலமெல்லம் வாழ்ந்திடலாம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment