காலத்தின் சதியா இல்லை
காதலர் தம் விதியா
கனவுகள் பல சுமந்தே
கண்டங்கள் பல
தாண்டி வந்தவர்கள்
கடந்த காலம் அதை எண்ணி
கண்ணீரில் கரைகின்றனர் இங்கு
வருங்கால வாழ்க்கை அதை
வளம்படுத்தவென
மேற்குலக நாட்டுக்கு வந்தவர்
வதிவிட உரிமைக்காய்
வழியில் வந்தோரை
வாழ்க்கை துணையாக்கின்றார்
அன்பு வைத்த உள்ளங்களை
யாரும் அறியாமலே
குடியுரிமை பறிபோகாமல் இருப்பதற்காய்
தள்ளியே வைத்தவர்கள் - தினம்
சொல்லி அழுகிறார்
கண்ணாடி முன்னிலையில் மட்டும்
தம் நிலைதனை
கடல் தாண்டி வந்ததினால்
காதல்தனை தாண்ட முடியாமல்
மன முழுக்க ஒருத்தியையும்
மனைவியென இன்னொருத்தி
கைப் பிடித்தே
காலத்தின் பாதையிலே
காயங்கள் பல சுமந்தே செல்கின்றார்...
உறவுகளை தனை நினைத்தே
உண்மைதனை மறைந்தே
உதட்டினை ஊமையாக்கியவர்
உதிர கண்ணீர் வடிக்கிறார் - தம்
இதயத்தில் இருந்து
கல்லறை செல்லும்வரை
இல்லையெனினும்
கரைந்த சாம்பலிலாவது - இந்த
இணைந்த இதயங்கள்
கலங்கும் எணும் எதிர்பார்ப்பில்...
2 comments:
மிக அருமை சிவரதி
உணர்ந்ததை படிப்பவரும் உணரும்படி
சொல்வதில்தான் படைப்பாளியின்
ஆளுமைத் திறன் உணரப்படுகிறது
உங்களுக்கு அந்தத் திறமை
இயல்பாய் அமைந்திருக்கிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அருமையான வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Post a Comment