குழந்தைப் பருவத்தே- தாய்
கூடவே இருந்திட
குழறி அழுதிடும்-குழந்தையின்
குணம் பிடிவாதம்
எட்டியடி வைக்கையிலும்
ஏடேடுத்துப் படிக்கையிலும்
எதிர்படும் பொருட்கள் எல்லாம்
எனக்கே உரியதேன எண்ணிடும்
எண்ணமது பிடிவாதம்
காலை எழுந்து கடமைதனை முடித்து
கல்வி கற்க செல்ல
கள்ளமது உள்ளமையால்
கையிலில்ல பொருளுக்காய்
கால் குத்தியழும் பிடிவாதம்
கட்டிளமைப் பருவத்திலே
காளையரும் கன்னியரும் காட்டிடும்
கணக்கற்ற கள்ளத்தனங்கள்
காலத்தால் கூட
கட்டுப்படுத்த முடியாத பிடிவாதம்
ஆறு மாதம் முதல் தொடங்கி
ஆறுபது வயதுக்கு மேலும்
ஆறறிவு தொடங்கி-ஓர்
அறிவு வரையும் இந்த
அகிலத்திலே எங்கும்
அழியாது தொடருது பிடிவாதம்
நிலையற்ற இவ் உலகில்
நீர் குமிழி எண்னங்களை
நீங்கி விட்டு
நினைத்ததை முடிப்பதற்காய்
நிஜமாய் உழைக்கும் நெஞ்சங்களே-உம்
நினைவுகள் நீண்ட தூரம் பயணிக்க
நீவீர் கொள்ளும் பிடிவாதம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமை அருமை அருமை.... இன்டிலியல் இணையுங்களேன் சிவரதி....
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள் அதிகம் அந்த ஆசையை பூர்த்திசெய்வதர்கான முயற்சியே பிடிவாதம். ரதிக்கு என்ன பிடிவாதமோ.
அற்புதமான வரிகள்
தோழி பிரஷா ஆம்
இணைந்து விட்டோன்
இண்டலியில் மட்டுமல்ல-உங்கள்
இனிய நெஞ்சங்களிலும்
தயா அண்ணா
முயற்சிகள் தவறலாம்
முயற்சிக்க தவறதே-ஆசைகள்
முடிவடையும் வரை
முயற்சிக்கு எங்கே
முற்றுப் புள்ளி
kaanal said..
நன்றி நன்றி.....
Post a Comment