வண்ணமலர் ஓவியமோ
வரைந்து வைத்த காவியமோ
எண்ணத்தை கொள்ளை கொள்ளும்
எழில் அனைத்தும் உன்னிடமே
சின்ன வண்ண மலராய்
புதுவசந்தம் வீசிட
புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்தவளே
வசந்தங்கள் எல்லாம்
தென்றலுடன் கலந்து - உன்
வாசலே நாடி வர
தேன் சுவை சொட்டியவே - உன்
வாழ்வு செழிக்கனுமே
வளம் பல பெற்று
வான்புகழ் பரப்பி
வையத்தில் நீ திகழ்ந்திட
வம்சம்மே சூழ்ந்துநின்று
வாழ்த்துதம்மா உன்னை..
3 comments:
ஆஹா ஆஹா அசத்தல் பாசம் கலந்த கவிதை...!!!
அருமை...
நல்லதொரு கவி வரிகள் ..
அம்மாவின் தாலாட்டு போல் அருமை ./.
Post a Comment