மனதினுள் திடத்துடன்
மதியினை திரட்டியே
விதிதனை வென்றிட
வாதிட்ட போதிலும்
காலத்தின் கதி இது
உனக்கென பதி
அவன் பாரினில்
படைதிட்ட போதிலே
விதிட்ட விதியது
பாசத்தில் புகுந்து
பாதிவழியிலே நிறுத்தி
புகட்டுது புத்தியை...
வழியேதும் தெரியாமல்
விழிமுடி சிந்தித்தே
பழியேதும் நெருக்காமல்
பகையெதும் தொடராமல்
இருப்பதற்காய் வாழ்கை - பயணத்தை
விதி வரைந்த பாதை
வழிதனிலே தொடர்கின்றாள்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment