நிதானத்துடனே நெஞ்சம்
நேர்வழி செல்கையில்.
பிறர் நிம்மதிக்காக
தன் மதியை மாற்றி
தானக்கு தானே
துரோகியாகி
உள்ளம் வலிக்க
உணர்வுகள் பகைக்க
உதட்டினால் சிரித்து
ஊருக்காய் வாழ்வதா தியாகம்
உண்மைக்காய் வாதாடு
உரிமைக்காய் போராடு
உயர்வுக்கு வழி காட்டு
முயற்சிக்கு கை கொடு
வீழ்ச்சிக்கு விடை கொடுத்தே
விடியலை நோக்கி - உன்
வேகத்தை நகர்த்து
வெற்றியின் பின்னே
உருவடிக்கப்படும் உன்
உண்மைத் தியாகம்
கற்பனையில் கோட்டை கட்டி
கனவுலகில் அதில் வாழ்ந்து
தோள் கொடுக்க முடியாது
தோல்விதனை தனதாக்கி
கண்ணீரில் கதை வடிக்கும்
காவிய கரு அல்ல தியாகம்
உருவமே அல்லாத
உயிரிலும் மேலாக
உலகத்தை மதித்திடும்
உன்னத பண்பாம் தியாகம்
1 comments:
இறுதியில் முடித்த விதம் சிறப்பு ..
நல்ல சிந்தனை ,.,
நல்லதொரு வரிகள் ..
வாழ்த்துக்கள் /.//
Post a Comment