எண்ணத்தில் என்னை
கருவாய் கொண்டதினால்
உருவான அவனிடத்தில்
புரியாத புதிர் அதனை
புரிந்து கொள்ள சென்றவள்
எண் கணக்கை மட்டுமல்ல - அவன்
எண்ணங்களையும் புரிந்ததினால்
உருவான உன்னத உறவினால்
உள்ளங்கள் இரண்டும்
உல்லாச பயணத்தினை
ஊர் அறிய தொடர்ந்தனவே...
உறவுகள் பகைத்ததினால்
ஊரை விட்டு புறப்பட்டு
புதுவாழ்வில் இணைய
இணைந்த இதயங்கள்
இணங்கியே எண்ணின...
கனவுகள் பல கொண்டே
காதலிக்காய் காத்திருக்கையிலே
கைபேசி மூலம் கதை பேசி
கடல்தாண்டி செல்ல
மறுந்த மறுகணமே
மனதை மட்டுமல்ல
மானத்தையும் இழந்த
அவமானத்தினால் -அவன்
மாத்திரைகள் கையேந்தி
மரணத்தை தனதாக்கின்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment