RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

ஆத்மா சாந்திக்காய்..

கருவினில் உன்னை
கனவுகளுடனே சுமந்து
கட்டிளம் பருவம்வரை
கண்ணை இமைபோல
உனை காத்தவள் இங்கே
கண்மணி இழந்து துடிக்கிறாள்

கடும் போரின் போதும்
கண்பார்வை துறந்தும்
கஷ்டங்கள் பல கடந்தும்
கடல் தாண்டி  அன்று - உனை
காலனிடம் மீட்டனரே

துன்பங்கள் மறந்து
துறைபோக கற்று
துளிர்விட்ட உன்வாழ்வு
பல்கலையில் துலங்க முன்னே
தூதன் அவன் உன்னை
துணைக்கு அழைப்பதற்காகவா?
தூது விட்டன் தூசிபோல்
சிறு நோய்தனையே..

மருத்துவம் பெற்று
மாட்சிமை பெற்று
மறுநாள் வருவாய் என
எதிர்பார்த்து இருந்த
இதயங்களில் பேரிடியாய்
இடிந்தது உன் மரண செய்தி
இன்னும் எண்ணுகிறோம் - இது
இரவு நேர கெட்ட
கனவு என்றே எண்ணி
கண் விழித்துப் பார்க்கையிலே
காணவில்லை உன்னை இங்கு

உன் நிழற்படத்து முன்னே
பெருகிடும் கண்ணீருக்குள்
நீந்துகின்ற உன் நினைவுகளுடன்
நிம்மதி வேண்டியே பிரார்த்திக்கிறோம்
உம் ஆத்மா சாந்திக்காய்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவனையே....

அறியாத ஆயுள் இதில்
அனுபவிக்க எண்ணியே
ஆரம்பர வாழ்வுதனை
அணை போட்டு விடாதே
அருவி போல் பொங்கிவரும்
அவன் அன்பு அதற்கு...

உள்ளமதில் உனை
உணராமலே உதித்திட்ட
உண்மை அன்பு அதனை
உறவுகளுக்காயும் - உன்
சுயநலத்திற்காயும்
உதிர்ந்து விடாதே

ஊருக்காய் உதயமாக்கி
உன் வாழ்வுதனில்
உலர்ந்த காற்றை சுவாசிக்கும்
உமைப் பொண்ணா நீயும்?

நெஞ்சமதில் நேர்மை கொண்டு
நீதி வழி பயணிக்கும் நீ
விதி விரிக்கும்
சதிவலையிலே சிக்காது - உன்
மதிதனை மீட்டி பார்த்தே
பதியாய் அவனையே பற்றி விடு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாசவலையிலே....

பாடித் பறந்திட்ட
சோலைக்கிளி இங்கே
பாசமென்னும் வலையிலே
வாசமாக மாட்டிற்றே....

ஊரு பேரு தெரியாமல்
உண்மை பொய் அறியாமல்
உள்ளத்தில் உருவான நாமத்தை
உறவாக உதயமாக்க
உறுதி கொண்டே முயற்சித்தான்....

எண்ணத்தில் உருவான
பல வண்ணங்களும்
சின்னமாய் கண்டாள்
அவனிடத்தே....

உதட்டு வழி
உண்மையை தினம் ஒலிக்க
உண்மை அன்பு அதற்காய்
உள்ளத்தை உவந்தளித்தாள்.....

உவப்பான செய்தியொன்று - அவள்
காதில் ஊர்த்ததினால்
ஊர் உறக்கும் நேரத்திலும்
உறக்கமின்றி தவிக்கின்றாள்
அறியாமல் தவறேதும்
புரிந்திருந்தாலும் அவன்
அணுகாமல் தடுப்பதற்காய்
இடர் எதும் அவனருகே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புத்தாண்டே..........

சித்திரையின் செல்வ நதியே
பத்திரமாய் உன்னை சுமப்பேன்
நித்திரையில் என்னை
தட்டியெழுப்பும் புத்தாண்டே
வருக என் வாசல் தேடி....

வயல் வெளிகளில்சனல் சிரிக்க
வையகமதில் சாந்தம் மலர
வெந்து நெந்த வருடம் போய்
விடியும் வருடம் வந்தாச்சு...

மலர்ந்திட்ட புத்தாண்டில்
பூமி எங்கும்
புன்னகையே எதிரொலிக்க
புது வசந்தம்  வீசிவர
வஞ்சனைகள் வாடிவிட
வையகத்தில் வளம் பெருக
வாழும் உயிர்கள்
நலம் நாளும் சிறக்க
தராணி எங்கும் தடம் பதித்தே
அணுதினமும் புகழ் பரப்ப
தமிழ்ப் புத்தாண்டே -உன்னை
வருக வருகவெனவே
வரவேற்று வாழ்த்துகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருமணவாழ்த்து மடல்........

இறைவன் வகுத்த
பந்தம் அதில்-இன்று
இணையும் இரண்டு
இதய சொந்தங்களின்
இனிய உறவு என்னாளும்
இளமைக்கால தென்றலுடன்
இன்ப ராகம் இசைத்திடவும்....

சின்ன சின்ன
புள்ளி வைத்தே போட்ட
எண்ணக் கோலமெல்லாம்
நல் வண்ணங்களாக
நாளும் வாழ்வை
அலங்கரித்திடவும்...

வசந்தம் வீசும் உம் உறவு
ஆழ்போல் தழைத்து
வானுயரப் புகழ்பரப்பி
அறுகு போல்வேரூன்றி
வாழையடி வாழையாக-உம்
வம்சம் தழைத்திடவும்....

வாழ்வெனும் ஆனந்த ஊஞ்சலில்
அமர்ந்திடும் உள்ளங்களை
அனைத்துலக ஜீவராசிகளும்
அகம் அது மகிழ்ந்து
 ஆசிகள் கூறிடவே
வளம் பல பெற்று
வளமுடன்வாழ-இறை
வரம் வேண்டி நானும்
மணநாள் காணும் இன்னாளில்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவுகளின் உதயத்திற்காய்....

பொங்கிவரும் அன்போடு
போட்டியிட்டே பாசம்
எனைநாடி வந்தபோதும்
நகர்கின்ற நாட்களோடு
போட்டியிட முடியாது
ஏக்கம் மட்டுமே
எதிர்பார்புடன் கூடி
மீண்டும் எஞ்சியே நிற்கின்றது
என்னிடத்தில்...

எத்தனை காலத்து
கனவுடன் கூடியே
உம் வரவுக்காய்
எண்ணிக்கையற்ற
எண்ணங்கள் எல்லாம்
எல்லையாய் சுற்றி நிற்கின்றது
என்னிடத்தில்.....

தொட்டிலில் போட அன்று
கிட்டாத சொந்தம்
எட்டத்து நாட்டில்-இன்று
வந்து எட்டி அணைத்ததனால்
அடைந்திட்ட ஆனந்தத்தை
அளவிட வார்த்தையில்லை
என்னிடத்தில்...

உம்மிடத்தில் பகிரப்படாத
பாசத்தின் பக்கங்களும்
பழகிப் பதிந்திட்ட
பசுமையான நினைவுகளும்
உறவுகளின் உதயத்திற்காய்
காத்திருக்கும் என்றும்
என்னிடத்தில்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எம் உறவு

நன்மையோ தீமையோ
நான் அறியேன் ஆனாலும்
நடந்து வந்த பாதையிலே
நிகழ்ந்திட்ட நிகழ்வுகளால் - உன்
நிம்மதி இழந்திட்டதனை
நிமிட இடைவெளியில்
ஒலித்திட்ட உன் குரலில்
உணர்ந்து கொண்டேன்

உண்மை நிலைபுரியாது
உள்ளத்து உணர்வறியாது
உருவான இவ் உறவுக்காய்
உதிர்த்திட்ட நிமிடங்களும்
உரைதிட்ட வார்த்தைகளும்
மீட்டிட முடியாதவையே
அடித்திட்ட அலையிலே
தவித்திட்ட மீனுக்காய்
தண்ணீர் வார்த்த நீ - இன்று
கண்ணீர் வடித்ததால்
உவர் நீர் மீண்டும் கிடைத்ததால்
உவகை அடைந்தது - அது
உலர்ந்து போகும் என்பதை
என்னாத எம் உறவு போல்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS