RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மனம்...

இல்லாத உருவம் ஒன்று
பொல்லாத வேலையெல்லாம்
சொல்லாமல் செய்கிறதே
எல்லோரும் அறிவோமே

சொந்த இடம்மேதுமில்லை - அதற்கு
ஆதி அந்தம் ஏதுமில்லை
தந்து போகும் எண்ணகளை
வந்த இடம் தெரியாமல்

சிந்தை அதில் சேமித்த
முந்தை நினைவெல்லாம்
கத்தையாய் திரண்டு வந்து
பந்தைப் போல் சுழலுகின்ற
விந்தையில் இருந்து விடையறியாத
வித்தையும் அதன் வசமே

நன்மையும் தீமையும் சேர்ந்து
மென்மையாய் நகர்த்தி
என்னிலை வருனியும் மாந்தர்
தன்னிலை அறிந்து இவ்வூலகில்
நன்னிலை வாழ ஒவ்வொருவர்
உள்ளத்தி்ன் உள்ளும்
ஓயாமல் உழைக்குது மனம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோபம்

அறியமுன் அவதரித்து
அமைதியை குலைத்து
அகிம்சையை சிதைந்து
அகங்காரத்தை நிலை நாட்டி
ஆழ்ந்த அன்பினைக்கூட 
அன்நொடியில் மழுங்கடிக்க செய்திடும்...

நினைத்ததை நெருக்க முடியாத
நிலையின் வெளிப்பாடா? - அல்ல
நினைக்க முக் கிடைத்திட செய்திடும்
நி்ர்ப்பந்தத்தின் செயற்பாடா?

ஆசைகளை அளவாக்கி
அதிகாரத்தை தனதாக்கி
அன்பை நிலையாக்க
அவரவர் உருவாக்கும்
மறுஉருவா கோவம்???

அநியாயம் அது பாவம்
அவரவர் மனதிற்கேற்ப
குணத்தினை தான் ஏற்று
குற்றவாளி என்று
கூண்டில் நிற்கின்றது 
மற்றவர் குதுகலத்திற்காய்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சந்திப்பு....

சிந்திக்க நேரமின்றி
சிறகடிக்குது மனது - உன்
சந்திப்பை எண்ணி...

சந்தேகம் பல கேட்க
சந்தர்ப்பம் பார்த்தே
சாந்தததை வரவழைத்து
சாதிக்கின்ற உதடுகள்...

எண்ணம் போல் வாழ்க்கை
எதிரிலே வருகின்ற
எதிர்பார்ப்புடனே
எடுத்து அடி வைக்கின்றாள்
எதிர்கால வாழ்வை சந்திக்க......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்த்துகின்றேன்.....

வையம் என்னும் பூந்தோப்பில்
வண்ண மலர்களாய் மொட்டவிழ்ந்து
வாழ்க்கை என்னும் பந்தமதில்
சொந்தமான உம் உறவில்
வசந்தம் வீசிடனும்  என்நாளும்...

உள்ளத்து  நல்ல எண்ணமெல்லாம்
பல வண்ணங்களாய் - உம்
இல்லத்தை அலங்கரிக்க
செல்வச்  செழிப்போடு
இனிய இன்பத்தின் இருப்பிடமாய்
இல்வாழ்வு சிறந்திடனும் என்நாளும்...

அன்பும் அறமும்
அல்லும் பகலும்
அழகாய் ஒளி வீசிடும்
ஆனந்த இல் வாழ்வு
அகிலத்தில் மென்மேலும் சிறக்க
ஆண்டவன் அருள் வேண்டி
அன்புடன் வாழ்த்துகின்றேன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பு...



ஊரு பேரு தெரியமால்
உருவேதும் அறியாமல்
உதட்டுவழி வார்த்தைகளில்
ஊற்றெடுத்த உறவு -இன்று
உயர்ந்து நிற்குது -இங்கு
உன்னத நட்பைச் சொல்லி....

உள்ளத்தில் கள்ளமில்லை
நெஞ்சமதில் வஞ்சமில்லை
நேர்மையினில் ஏழ்மையில்லை - இங்கு
நீதியினில் ஊனமின்றி
ஓளிவிட்டு ஓளிர்கிறது
உலகமதில் எங்கள் நட்பு...

இனிய நட்பிதற்க்காய்
இணையவழி அழைப்பெடுத்து
இனிதே தொடர்ந்து வந்து
ஈராறுமாத இறுதியின் பின்
இன்னொர் ஆண்டில் கால்பதித்திட்ட
இவ் நட்பு என்றும் தொடர்ந்திட
இறைவன் துணை நாடுகின்றோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வார்த்தை....




 வாய் பேசிடும் வார்த்தையதில்
வகை வகையாய் ஆழப்பதிந்த
ஆயிரம்  ஆயிரம் அர்த்தங்கள்
அறிந்தும் அறியாமலும்
அன்றாடம் அவரவர் வாழ்வில்
ஆதிக்கத்திற்க்கு அதுவே காரணமாகிறது...

வஞ்சமில்லா நெஞ்சமதில்
மிஞ்சியே இருக்கும் அன்பால்
தங்குதடை ஏதுமின்றி
தடம்புரண்டு வரும் வார்த்தையாதால்
தர்ம வழி காட்டியாய்
தரணியிலே தடம் பதித்தோர் பலர்..

கள்ளமதை உள்ளிருத்தி
வள்ளல் போல் வடிவம் தாங்கி
நல்லதெல்லாம் நஞ்சு ஆக்க
உள்ளமதில் உறுதி பூண்டே
சொல்லாலே உறவாடி
தள்ளாமல் படுகுழியில்
தானாயே விழவைக்கும்-அந்த
வல்லமையும் வார்த்தைக்கே..

எவ்வளவுதான் இருந்தாலும்
இயம்பியதை மீள எடுத்திடவோ
இன்றோடு மறந்திடவோ
அளவேதும் சொல்லிடவோ வார்த்தைக்கு
யாராலும் இயலாவில்லை இன்னும்..

அன்பாய் அணைத்திடவும்
ஆறுதலாய் தாலாட்டிடவும்
அனைத்திற்கும் அடித்தளமாய்
ஆணவத்தின் மறுவுருவாய்
ஆங்காங்கே வார்த்தை எங்கும்
அலைமோதி தவழ்கிறது......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS