வையம் என்னும் பூந்தோப்பில்
வண்ண மலர்களாய் மொட்டவிழ்ந்து
வாழ்க்கை என்னும் பந்தமதில்
சொந்தமான உம் உறவில்
வசந்தம் வீசிடனும் என்நாளும்...
உள்ளத்து நல்ல எண்ணமெல்லாம்
பல வண்ணங்களாய் - உம்
இல்லத்தை அலங்கரிக்க
செல்வச் செழிப்போடு
இனிய இன்பத்தின் இருப்பிடமாய்
இல்வாழ்வு சிறந்திடனும் என்நாளும்...
அன்பும் அறமும்
அல்லும் பகலும்
அழகாய் ஒளி வீசிடும்
ஆனந்த இல் வாழ்வு
அகிலத்தில் மென்மேலும் சிறக்க
ஆண்டவன் அருள் வேண்டி
அன்புடன் வாழ்த்துகின்றேன்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nalla sinthanai...
தமிழ்வாசி - Prakash said.. நன்றிகள்
Post a Comment