இல்லாத உருவம் ஒன்று
பொல்லாத வேலையெல்லாம்
சொல்லாமல் செய்கிறதே
எல்லோரும் அறிவோமே
சொந்த இடம்மேதுமில்லை - அதற்கு
ஆதி அந்தம் ஏதுமில்லை
தந்து போகும் எண்ணகளை
வந்த இடம் தெரியாமல்
சிந்தை அதில் சேமித்த
முந்தை நினைவெல்லாம்
கத்தையாய் திரண்டு வந்து
பந்தைப் போல் சுழலுகின்ற
விந்தையில் இருந்து விடையறியாத
வித்தையும் அதன் வசமே
நன்மையும் தீமையும் சேர்ந்து
மென்மையாய் நகர்த்தி
என்னிலை வருனியும் மாந்தர்
தன்னிலை அறிந்து இவ்வூலகில்
நன்னிலை வாழ ஒவ்வொருவர்
உள்ளத்தி்ன் உள்ளும்
ஓயாமல் உழைக்குது மனம்...
1 comments:
இறுதியில் முடித்த விதம் சிறப்பு ... வாழ்த்துக்கள்
Post a Comment