வானத்து சூரியன் போல் - எம் வாழ்வின் ஒளி விளக்காய் திகழ்ந்தவரே வாழ்க்கைப் பயணம்மிதில் எம்மையெல்லாம் வழியினிலே ஏன் விட்டுச் சென்றே......!!!!
காரம் பற்றி வந்த உம் மனையாள் -
கதறித் துடிக்கின்றாள் - நீங்கள்
கண்மணியாய் காத்துவந்த பிள்ளைகளும் - இங்கே
கண்ணீர் மில்கியே கலங்கித் தவிக்கின்றன.......
மகிழ்வுடனே மனம் திறந்து கதை பேசி கழிந்த கனம் ஒவ்வொன்றும் கலையாது நிற்கையிலே....!!!
காலாணவன் உங்களை அழைத்தமையால் - மாமா
கதிகலங்கி நிற்கின்றோம் உங்கள் குடும்பமே.
ஊதட்டினிலே புண்ணகையும் உள்ளத்தில் அன்பும் பொங்க
உரிமையுடன் அனைத்தெடுத்த உம் பேரச் செல்வங்கள் உண்மை நிலை அறியாது உறங்குகின்றீர் என நினைத்து உம்மை தினம் அழைக்கையிலே உறைகிறது எம் குருதி ...!
எல்லையற்ற இவ்வுலகில் உங்கள் அன்பிற்காய் ஏங்கி தவிக்கும் உறவுகள் அனைத்தும் நீங்க உங்கள் நினைவுகளுடன் - விழி நீர் செறிந்து நிற்கின்ற வேளையிலே நிம்மதி வேண்டிப் பிதார்த்திக்கின்றோம்..!
உங்கள் ஆத்மா சாதிக்காய்
ஓம் சாந்தி .! சாந்தி.! சாந்தி.!
ஆத்மா சாந்திக்காய்..
01:49 |
Read User's Comments(0)
02:21 |

வசந்தகால பருவமிதில்
மொட்டவிழ்ந்த மலர்கள் இவை
வாழ்க்கை என்னும் பந்தத்தில்
வாசம் வீசி இணைந்தவாம்
பரந்த இந்த பூமியினிலே
பாசம் என்னும் நீருற்றி
அன்புடனே அறம் வளர்த்து
அறுகுபோல் வேர் ஊன்றி
அருனுடன் அஜியும் சேர்ந்தே
ஆழ மரமாய் நீவிர் வாழ...
நற் சங்கதி சொல்லியே சந்ததம் பாடிட
நறுமணம் பொங்கவே - இவ்
இருமணம் இணைகின்ற
இனிய இன்நாளாய்
இனிவரும் நாட்களும் மலர
இறைவன் துணை வேண்டி
இனிதே வாழ்த்துகின்றோம்
31ம் நாள் நினைவஞ்சலி...
08:28 |
நிழலாய் தொடர்ந்தவர்கள் நீங்கள் _ இன்று
நிஜத்தில் இல்லையென நினைக்கையிலே
நெஞ்சம் பதறுகிறதே...
காலத்தின் கோலங்களில்_ நாம்
கடல் தாண்டி நிற்க்கின்றோம்
கடைசி ஊர்வல்த்தில் கூட கலந்திட முடியாது
கதறித் துடிக்கின்றோம்....
வாழ்வின் எல்லையறியாது _ உங்களை
வந்து சந்திப்போம் என இருக்கைப்யிலே
வழியில் எமைப் பிரிந்து எங்கு சென்றீர்கள்
வாவா சித்தப்பாவே உங்கள்
வதனம் இனி எங்கு காண்போமோ...
உங்கள் நிழற்படத்து முன்னே
பெருகிடும் கண்ணீருக்குள் நீங்காது
நீந்துகின்ற உங்கள் நினைவுகளுடன்
நிம்மதி வேண்டியே பிரார்த்திக்கிறோம்
உங்கள் ஆத்மா சாந்திக்காய்......
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
உள்ளங்களே....
08:25 |
உள்ளத்தில் ஒன்று வைத்து
ஊதட்டால் சிரித்து
உண்மையில்லா வார்த்தைகளை
உதிர்க்கின்ற உள்ளங்களே......
அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளாய்
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையினிலே உமக்கு
எது நன்மை என்றே தினம் பார்க்கும் உள்ளங்களே...
வஞ்சனை ஒன்றே நோக்கமாய் பிறரை
வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கமாய்
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களாய் வஞ்சட்தினை
பின்னி பிணைந்து செய்யும் உள்ளங்களே...
உங்களில் இத்தனை நிறங்களா
உள்ளத்தில் இத்தனை தோற்றங்களா
உண்மையில்லா இந்த மாற்றங்கள்
உங்கள் வார்த்தையில் மட்டுமா தடுமாற்றம் எத்தனை
உள்ளங்கள் வாழ்னிவில் தினம்தினம் போராட்டாம்...
ஊதட்டால் சிரித்து
உண்மையில்லா வார்த்தைகளை
உதிர்க்கின்ற உள்ளங்களே......
அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளாய்
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையினிலே உமக்கு
எது நன்மை என்றே தினம் பார்க்கும் உள்ளங்களே...
வஞ்சனை ஒன்றே நோக்கமாய் பிறரை
வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கமாய்
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களாய் வஞ்சட்தினை
பின்னி பிணைந்து செய்யும் உள்ளங்களே...
உங்களில் இத்தனை நிறங்களா
உள்ளத்தில் இத்தனை தோற்றங்களா
உண்மையில்லா இந்த மாற்றங்கள்
உங்கள் வார்த்தையில் மட்டுமா தடுமாற்றம் எத்தனை
உள்ளங்கள் வாழ்னிவில் தினம்தினம் போராட்டாம்...
ஆன்மா...அன்பு...
01:09 |

அன்னை அவள் அன்புதனை - அன்று
அகமற அனூபவித்தேன்...
அன்னை என்றால் என்னவென்று - இன்று
அனுபவத்தால் புரிந்துகொண்டேன்...
அகத்திருந்த போதும் உதித்து
அழுத போதும் அனுபவித்த வலிமறந்து....
அணைத்து அமுதுட்டி அடைந்திட்ட
ஆன்ந்த்த்திற்கு அளவேதுமில்லை - இங்கு....
அம்மா என்றால் அன்பு அல்ல
அனைத்து ஜீவராசிகளினாதும் ஆன்மா...
Subscribe to:
Posts (Atom)