உள்ளத்தில் ஒன்று வைத்து
ஊதட்டால் சிரித்து
உண்மையில்லா வார்த்தைகளை
உதிர்க்கின்ற உள்ளங்களே......
அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளாய்
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையினிலே உமக்கு
எது நன்மை என்றே தினம் பார்க்கும் உள்ளங்களே...
வஞ்சனை ஒன்றே நோக்கமாய் பிறரை
வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கமாய்
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களாய் வஞ்சட்தினை
பின்னி பிணைந்து செய்யும் உள்ளங்களே...
உங்களில் இத்தனை நிறங்களா
உள்ளத்தில் இத்தனை தோற்றங்களா
உண்மையில்லா இந்த மாற்றங்கள்
உங்கள் வார்த்தையில் மட்டுமா தடுமாற்றம் எத்தனை
உள்ளங்கள் வாழ்னிவில் தினம்தினம் போராட்டாம்...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment