நிழலாய் தொடர்ந்தவர்கள் நீங்கள் _ இன்று
நிஜத்தில் இல்லையென நினைக்கையிலே
நெஞ்சம் பதறுகிறதே...
காலத்தின் கோலங்களில்_ நாம்
கடல் தாண்டி நிற்க்கின்றோம்
கடைசி ஊர்வல்த்தில் கூட கலந்திட முடியாது
கதறித் துடிக்கின்றோம்....
வாழ்வின் எல்லையறியாது _ உங்களை
வந்து சந்திப்போம் என இருக்கைப்யிலே
வழியில் எமைப் பிரிந்து எங்கு சென்றீர்கள்
வாவா சித்தப்பாவே உங்கள்
வதனம் இனி எங்கு காண்போமோ...
உங்கள் நிழற்படத்து முன்னே
பெருகிடும் கண்ணீருக்குள் நீங்காது
நீந்துகின்ற உங்கள் நினைவுகளுடன்
நிம்மதி வேண்டியே பிரார்த்திக்கிறோம்
உங்கள் ஆத்மா சாந்திக்காய்......
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
0 comments:
Post a Comment