RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

31ம் நாள் நினைவஞ்சலி...



நடந்து வந்த பாதையிலே
நிழலாய் தொடர்ந்தவர்கள் நீங்கள் _ இன்று
நிஜத்தில் இல்லையென நினைக்கையிலே
நெஞ்சம் பதறுகிறதே...

காலத்தின் கோலங்களில்_ நாம்
கடல் தாண்டி  நிற்க்கின்றோம்
கடைசி ஊர்வல்த்தில் கூட கலந்திட முடியாது
கதறித் துடிக்கின்றோம்....

வாழ்வின் எல்லையறியாது _ உங்களை
வந்து சந்திப்போம் என இருக்கைப்யிலே
வழியில் எமைப் பிரிந்து எங்கு சென்றீர்கள்
வாவா சித்தப்பாவே உங்கள்
வதனம் இனி எங்கு காண்போமோ...


 உங்கள் நிழற்படத்து முன்னே
பெருகிடும் கண்ணீருக்குள் நீங்காது
நீந்துகின்ற உங்கள் நினைவுகளுடன்
நிம்மதி வேண்டியே பிரார்த்திக்கிறோம்
உங்கள் ஆத்மா சாந்திக்காய்......



ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உள்ளங்களே....

உள்ளத்தில் ஒன்று வைத்து
ஊதட்டால் சிரித்து
உண்மையில்லா வார்த்தைகளை
உதிர்க்கின்ற உள்ளங்களே......

அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளாய்
 உண்மைக்கும்  பொய்மைக்கும் இடையினிலே உமக்கு

 எது நன்மை என்றே தினம் பார்க்கும் உள்ளங்களே...

வஞ்சனை ஒன்றே நோக்கமாய் பிறரை

வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கமாய்
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களாய்
வஞ்சட்தினை
பின்னி பிணைந்து செய்யும்  உள்ளங்களே...

உங்களில் இத்தனை நிறங்களா
உள்ளத்தில் இத்தனை தோற்றங்களா

உண்மையில்லா இந்த மாற்றங்கள்
உங்கள் வார்த்தையில் மட்டுமா தடுமாற்றம் எத்தனை

உள்ளங்கள் வாழ்னிவில் தினம்தினம் போராட்டாம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மா...அன்பு...



அன்னை அவள் அன்புதனை - அன்று
அகமற அனூபவித்தேன்...

அன்னை என்றால் என்னவென்று - இன்று
அனுபவத்தால் புரிந்துகொண்டேன்...

அகத்திருந்த போதும் உதித்து
அழுத போதும்  அனுபவித்த வலிமறந்து....

அணைத்து அமுதுட்டி அடைந்திட்ட
ஆன்ந்த்த்திற்கு அளவேதுமில்லை - இங்கு....

அம்மா என்றால் அன்பு அல்ல
அனைத்து ஜீவராசிகளினாதும் ஆன்மா...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS