உதட்டால் சிரித்த
உள்ளத்தில் ஒன்று வைத்த
உண்மையில்லா வார்த்தைகள
உதிர்க்கின்ற மனிதர்களோ...
மனிதரில் இத்தனை நிறங்களா? _அவர்கள்
மனதினில் இத்தனை தோற்றங்களா?
வாழ்னிவில் இத்தனை மாற்றங்களா?
அவர்கள் வார்த்தையில் இத்தனைதடுமாற்றங்களா?
அன்பென்றும் பண்பென்றும் சொல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளோ
எது உண்மை?எது பொய்? இதைவிட எது நன்மை
என்றே தினம்தினம் பார்க்கும் மனிதர்களோ...
வஞ்சனை ஒன்றே அவர் நோக்கங்களா?
பிறரை வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கங்களா?
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களா?
பின்னி பிணைந்து செய்யும் வஞ்சங்களா?
உண்மை உணரா உள்ளங்களா?
உயிர் இனிக்க பேசும் உறவுகளா?
உள் ஒன்று வைத்து பேசும் கூட்டங்களா?
உங்களுக்கும் புறம் உண்டு அறிவீர்களா?
வேஷம் போடும் வெகுளிகளா?
பாசமாய் பேசும் பகைமைகளா?
மானசீகமாய் வாழப் பார்க்கின்றேரை_ ஏனோ
மனிதனாகவே வாழப் பணிக்கின்றார்?
துன்பங்களையும் துரோகங்களையும்
தூசாய் தூரத்தூக்கி போட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர்
உறுதுணையாய் இணைந்துவாழ வழியமைப்போம்
உண்மை உணர்ந்த உள்ளங்களாய்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உண்மை உணரா உள்ளங்களா?
உயிர் இனிக்க பேசும் உறவுகளா?
உள் ஒன்று வைத்து பேசும் கூட்டங்களா?
உங்களுக்கும் புறம் உண்டு அறிவீர்களா?//
உயர்ந்த வரிகள் .. என் வாழ்த்துக்கள்
Post a Comment