ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்மா திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் என்நாளும்...
வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகாலம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....
இன்பமும் துன்பமும் இருப்பது - எம்கையில்
இயாலாமை என்பதை இன்றே - நீ
இல்லாமால் நீக்கிவிட்டால்
இடரின்றி வாழலாம் வையத்தில்
ஆணவத்தை அடியோடுவிரட்டா அவதிப்படதே
அள அளவாய் சுருக்கி -அன்புக்கு
ஆணைபோடாது அகமகிழ்ந்து உறவாடு
அகிலமே உன்னிடம் அடைக்களம்.
0 comments:
Post a Comment