நன்றிகள்.....
09:46 |
நல்லதொரு வாழ்க்கைதனை
நமக்கமைத்துத் தருவதற்காய்
கண்ணிரண்டும் அயராது- தாம்
மண்ணின் உழைப்பாலே
கல்விதனைப் பரிசளித்து
கடல் கடந்து அனுப்பி வைத்து
கைப்பிடித்தும் வைத்துவிட்டார்- இணைந்தே
காலமெல்லாம் வாழ்வதற்காய்....
உதிரத்தில் பங்கெடுத்து
உடன்பிறப்பாய் உதித்தவரும்
உறுதியுடன் அவர்கள்தமை கைப்பிடித்தே
உற்றதுணைனா உறவுகளுடனும்
உண்மையன்பைப் பகிர்ந்தளித்து
உறவான அண்ணான் அண்னி- அனைவரதும்
உடல் உள உழைப்பாலே
உள்ளங்கள் இரண்டும்-இங்கே
உறவுப் பாலத்தில்
ஊர் போற்ற இணைந்தனவே...
இந்நன்நாளை சிறப்பிக்க
நாடுகள் பலதிருந்தும் நல் வருகைதந்து
நம்மை வாழ்த்திச் சென்றவர்க்கும்
நல்வாழ்த்துக்களை மனம்திறந்தும்- வாழ்த்து
மடல் வரைந்தும் வாழ்த்தி வழங்கியோர்க்கும்
நன்றிகளை நவில்கின்றோம்.....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment