RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அன்பு.....

அன்புதனை அதிகமாக
யாரிடமும் வைக்காதே
ஏன் என்று கேட்கிறீரா
எடுத்தே இயப்புகிறேன்...

உண்மை அன்பாலே இணைந்து
உயிரோடு கலந்திட்ட உறவு
பிரியும் நேரத்தில் அழுவது
உன் கண்களாக இருக்காது
இதயமாகதான் இருக்கும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்புகள்.....


முகம் பார்த்து
முகவரி தெரிந்து
முழுவதும் அறிந்து
முதிர்ந்தன  சில நட்புகள்..

அறிமுகமே இல்லாது
அவலுடன் அருகமர்ந்து
அன்பால் அரவணைத்து
ஆயுள் வரை பயணிக்கும் சில நட்புகள்..

பணத்தை பார்த்தவுடன்
பந்தத்தை உருவாக்கி
பழக்கத்தை உறவாக்கி
பழம்போல கனியும் சில  நட்புகள்..

காலங்கள் பல கடந்தும்
கடல் தண்டி வாழ்ந்தாலும்
கஷ்டத்தில்  கைகொடுத்து
கவலைகளை மறக்கவைக்கும் உண்மையான சில நட்புகள்...

நெஞ்சத்தை கல்ளாகி
வஞ்சத்தை சொல்லாகி
எண்ணத்தை புன்னாக்கி
பாசத்தை துண்டாக்கும் சில நட்புகள்...

வேசத்தை விதைத்து
நேசத்தை  இராண்டாக்காது- உண்மை
பாசத்தை படரவிடுங்கள்
நட்பெனும்  புனித தாடகத்தில் ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அடைக்களம்.

ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்மா திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் என்நாளும்...

வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகாலம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....

இன்பமும் துன்பமும் இருப்பது - எம்கையில்
இயாலாமை என்பதை இன்றே - நீ
இல்லாமால் நீக்கிவிட்டால்
இடரின்றி வாழலாம்  வையத்தில்

ஆணவத்தை அடியோடுவிரட்டா அவதிப்படதே
அள அளவாய் சுருக்கி  -அன்புக்கு
ஆணைபோடாது அகமகிழ்ந்து உறவாடு
அகிலமே உன்னிடம் அடைக்களம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உண்மை உணரா உள்ளங்களா?

உதட்டால் சிரித்த
உள்ளத்தில் ஒன்று வைத்த
உண்மையில்லா வார்த்தைகள
உதிர்க்கின்ற மனிதர்களோ...

மனிதரில் இத்தனை நிறங்களா? _அவர்கள்
மனதினில் இத்தனை தோற்றங்களா?
வாழ்னிவில் இத்தனை மாற்றங்களா?
அவர்கள் வார்த்தையில் இத்தனைதடுமாற்றங்களா?

அன்பென்றும் பண்பென்றும் சொல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளோ
எது உண்மை?எது பொய்? இதைவிட எது நன்மை
என்றே தினம்தினம் பார்க்கும் மனிதர்களோ...

வஞ்சனை ஒன்றே அவர் நோக்கங்களா?
பிறரை வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கங்களா?
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களா?
பின்னி பிணைந்து செய்யும் வஞ்சங்களா?

உண்மை உணரா உள்ளங்களா?
உயிர் இனிக்க பேசும் உறவுகளா?
உள் ஒன்று வைத்து பேசும் கூட்டங்களா?
உங்களுக்கும் புறம் உண்டு அறிவீர்களா?

வேஷம் போடும் வெகுளிகளா?
பாசமாய் பேசும் பகைமைகளா?
மானசீகமாய் வாழப் பார்க்கின்றேரை_ ஏனோ

மனிதனாகவே வாழப் பணிக்கின்றார்?

துன்பங்களையும் துரோகங்களையும்
தூசாய் தூரத்தூக்கி போட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர்
உறுதுணையாய் இணைந்துவாழ வழியமைப்போம்
உண்மை உணர்ந்த உள்ளங்களாய்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS