பிறக்கும் போது அறியவில்லை
பூமி எனக்கு புதியதன்று
வளரும் போதும் தெரியவில்லை
வரம்பு இல்லை உறவுக்கென்று
பள்ளிக் கல்விதனை
பசுமையுடன் கற்ற இவள்
பெருமையுன் பதவிதனை
கையில் ஏற்று கடைமைக்காய்
காத்திருக்க முன்னே...
இளமைக்கால தென்றலுடன்
இனிமையும் சேர்ந்திடவே
வெற்றியுடன் வெளிக்கிட்டாள்
வெளிநாட்டுப் பயணத்திற்காய்
புரிந்த்து பாதி புரியதது மீதி
தெரிந்த்து சில தெரியத்து பல
சங்கடங்கள் பல பட்டே
சமாளிக்க கற்றுக் கொண்டாள்
வறுமை ஏதும் இல்லாது
நிலைமைக்கு ஏற்ப்பவே எழிலுடன்
எளிமையாய் அமைந்த
இவ்வாழ்வை இரசிக்கையில்
இறைமையின் பரிசாய்...
புதுவாழ்வும் புத்தாண்டும் வரவேற்க
புத்தம் புதியதாய் சுற்றமும் கூடிட
புதுநாட்டில் புகுந்தவீட்டில்
புன்னகையுடனே பூமியில்
புதுத்தடம் பதிக்கின்றாள்
0 comments:
Post a Comment