RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

இதயங்கள் கைகளிலே.......



பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையிலான பித்தலாட்டத்தில்
வாழ்க்கையின் வழுக்களை
அறியாமலே அலைமோதும்
ஆனந்த எண்ணங்கள்
அகிலமதில் அலங்கரிக்கப்படுமா?

அறிவியல் உலகம்
ஆகாயத்தைக் கடந்தபோதும்
ஆண்டவன் வரைந்த விதிதனை
அறிய   முடியவில்லை
அறிஞர் பலர் கூடியும்.

அவரவர் வாழ்வில்
பயணங்கள் பலவாகி-பல
பந்தங்கள் சொந்தங்கள் உருவாகி
பாசத்தில் திழைத்திட்ட போதிலும்
உள்ளங்கள் உணர மறுக்குது
உண்மை இன்பத்தின் இனிமையை..

வீதியிலிள்ள மாடி கோடிகள் மேல்
மனதைப் படரவிட்டு-பாவியாய்
பாதியில் வாழ்வைத் தொலைத்தவர்
சேதிகள் அறிந்த பின்னும்
நீதிவழியில் நிளும் பயணங்கள் சிலவே.

பழகிய உறவுகள் பாசத்தை
பாதியில் பிரிந்திட்ட-அந்த
பாரத்தைக் குறைத்திட
பசுமை நினைவுகளை
பாலமாய் ஆக்கி அழகாய்
பயணத்தை தொடரும் பலர்.

இறைவன் வரைந்திட்ட
வாழ்க்கைப் பயணத்தில்
இவ்வுலக வாழ்வினை
இன்பமாய் நகர்த்துதல்
இனிய இதயங்கள் கைகளிலே..... .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment