RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நினைவுகள்.....

இவ்வுலக வாழ்வில்
இல்வாழ்வு புகமுன்
இன்னொரு மனையில்-இவள்
இணைந்து வாழ்ந்திட்ட
இருவருட வாழ்வின்
இனிய நினைவுகள்-இங்கே...

அந்நியா நாடென்றில்
அடியெடுத்து வைத்த இவள்
அந்நியமாய் எண்ணது
அவள் மனையாய்
அகம் மகிழ்ந்து வாழ்ந்தாள்
அம் மனையில்.....

அன்பால் அரவணைத்து
அறுசுவையாய் உணவளித்து
அறுதலாய்க் கதைபேசி
அம்மணையில் அவள் அன்னையனால்
அவ் இல்லத் தலைவி.

மெல்ல நடைநடந்து
நல்ல பொருள்தேடி-நாம்
நடந்திட்ட தெருவெல்லாம்-நட்புடனே
நல்லது கெட்டது என
பகிர்ந்திட்ட கதைகள் பல....

தனிமையென அறிய முன்னே
தங்கையாய் என்னருகில்-அவள்
மழலை மொழி கேட்கையிலே
கவலைகளைக் கழைத்திடுவேன்.

அணத்திலுமே அரைவாசி
பகிர்ந்தளிக்கும் அவள் பாசத்தை
பக்கத்திருந்தே பகிரமுடிய-ஓர்
பரிதவிப்பு இருவர் மனதிலுமே...

உலகத்தின் சுழற்ச்சியில்
புருவங்கள் மட்டுமா?-மறுகிறது
உருவங்கள் உருமாறி
உறவுகள் பல உருவான போதிலும்
திரவமாய் ஓடுது பல
திடமாய் நிலைக்குது சில....

காலங்கள் மாறி பலவண்ணக்
கோலங்கள்  நிலையான போதிலும்
நெஞ்சில் நீங்காது நிலைக்குது
இனிய நினைவுகள் என்றும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

arasan said...

நச்சென்று நெஞ்சில் நங்கூரமாய் பதியும் கவிதை ... வாழ்த்துக்கள் ..

Post a Comment