மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி......
01:28 |
தேசத்தின் விடியலில் வீசும்
வாசத்தை சுவாசித்திட
பாசறை நோக்கி - எதிரி
படையினை வீழ்த்தி - தம்
தேகத்தை விதைத்து - எம்
தேசியம் காத்திட்ட - மாவீரர்
மாண்புற போற்றி வணங்குவோம்
எம் இனத்தின் உண்மை சிரிப்புக்காய்
உணர்வினை உழைப்பாக்கி
உதிரத்தை உரமாக்கி - ஓர்
உறவின் கீழ் உருவான - தமிழ்
அன்னையின் சுகந்திர கருவானது - என்றும்
நிலையாக வீறுநடை போட
எம் இன ஒருமை என்றும்
அந்நிய சக்தியால் அழியாமல் இருக்கனும்
விடுதலைக்கான விடியலை வழியினை
எம் விழி தேடிட
நிலை தடுமாறது நெஞ்சினில் திடத்துடன்
நேர்வழி நடந்து நியாயத்தை நிலைநாட்டிவோம்
வலிமை பொருத்திய வல்லரசு நாடுகளே
எம் தேசத்தின் தாகத்தினால்
வாதிட்டு கேட்கின்றோம்
தாயின் மடியில் தலை சாய்க்கும் உரிமை
மகனிற்கு இல்லையாம் ஆனால்!
மர்ம மனிதனுக்கு உண்டாம்
இது தான் நாம் நாட்டு ஆட்சி
எங்கே உம் மனச்சாட்டி?
ஆயுதம் முன்னே
அடிமை விலங்குகளாய்
அவதியுறும் எம் மக்கள்
அடக்குமுறை ஒழிந்து
சுகந்திர காற்றை சுவாசிக்கும் வரை
ஒன்றுபட்டு ஓயாது உழைக்கனும் நாம் எல்லாம்..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment