அன்பின் அருவுருவம்
ஆண்டவனின் அன்பளிப்பு
இதயங்களின் இடமாற்றம்
ஈருயிர்களின் ஒன்றினைவு காதல்...
உள்ளத்தைக் கவர்ந்தவர்க்காய்
ஊர்கூடி தடுத்திட்ட போதிலும்
எதிர்ப்புக்கள் பல தாண்டி
ஏற்றிட்ட இதயங்கள் அன்பால்
ஐக்கியமானது காதல்...
ஒளிமாயமான வாழ்விற்காய்
ஓயாது உழைத்து-ஓர்
ஒளடதப் பொருளாய்
அகிலத்தில் அணைத்துயிர்க்கும்
அக மகிழ்ச்சியைக் கொடுத்திடும் காதல்.
காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவரும்
காதல் தேசம் இதில் காலமெல்லாம்
கலந்து மகிழ காதலுடன் நானும்
காதலரை வாழ்த்துகிறேன்.
காதல்
13:47 |
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவரும்
காதல் தேசம் இதில் காலமெல்லாம்
கலந்து மகிழ காதலுடன் நானும்
காதலரை வாழ்த்துகிறேன். //
காதல் வாழ்த்துக் கவிதை அருமை
ரசித்துச் சுவைத்தேன்
பகிர்வுக்கு நன்றி
Post a Comment