அன்னையும் தந்தையும்......
06:42 |
அகிலத்தை அறிவித்த
அன்பின் முகவரிகள்
ஆண்டவனின் அருள்வடிவம்
அனைவருக்கும் அரும் பொக்கிசம்
அன்னையும் தந்தையுமே...
அன்னை மடியினிலே
அகிலத்தில் அவதாரித்தேன்
அன்புத் தந்தை தோளினிலே
அதை வலம் வந்தேன்...
பகலிரவாய்ப் பாடுபட்டு
பாசத்தால் எமைச் சுமந்து
பார் போற்ற நாம் வாழ
பட்ட துன்பம் அத்தனைக்கும்-அது
பரிசாய் மனம் மகிழும்
அன்புத் தெய்வங்களே
அன்னையும் தந்தையும்
Read User's Comments(0)
காதல்
13:47 |
அன்பின் அருவுருவம்
ஆண்டவனின் அன்பளிப்பு
இதயங்களின் இடமாற்றம்
ஈருயிர்களின் ஒன்றினைவு காதல்...
உள்ளத்தைக் கவர்ந்தவர்க்காய்
ஊர்கூடி தடுத்திட்ட போதிலும்
எதிர்ப்புக்கள் பல தாண்டி
ஏற்றிட்ட இதயங்கள் அன்பால்
ஐக்கியமானது காதல்...
ஒளிமாயமான வாழ்விற்காய்
ஓயாது உழைத்து-ஓர்
ஒளடதப் பொருளாய்
அகிலத்தில் அணைத்துயிர்க்கும்
அக மகிழ்ச்சியைக் கொடுத்திடும் காதல்.
காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவரும்
காதல் தேசம் இதில் காலமெல்லாம்
கலந்து மகிழ காதலுடன் நானும்
காதலரை வாழ்த்துகிறேன்.
புதுத்தடம்....
10:44 |
பிறக்கும் போது அறியவில்லை
பூமி எனக்கு புதியதன்று
வளரும் போதும் தெரியவில்லை
வரம்பு இல்லை உறவுக்கென்று
பள்ளிக் கல்விதனை
பசுமையுடன் கற்ற இவள்
பெருமையுன் பதவிதனை
கையில் ஏற்று கடைமைக்காய்
காத்திருக்க முன்னே...
இளமைக்கால தென்றலுடன்
இனிமையும் சேர்ந்திடவே
வெற்றியுடன் வெளிக்கிட்டாள்
வெளிநாட்டுப் பயணத்திற்காய்
புரிந்த்து பாதி புரியதது மீதி
தெரிந்த்து சில தெரியத்து பல
சங்கடங்கள் பல பட்டே
சமாளிக்க கற்றுக் கொண்டாள்
வறுமை ஏதும் இல்லாது
நிலைமைக்கு ஏற்ப்பவே எழிலுடன்
எளிமையாய் அமைந்த
இவ்வாழ்வை இரசிக்கையில்
இறைமையின் பரிசாய்...
புதுவாழ்வும் புத்தாண்டும் வரவேற்க
புத்தம் புதியதாய் சுற்றமும் கூடிட
புதுநாட்டில் புகுந்தவீட்டில்
புன்னகையுடனே பூமியில்
புதுத்தடம் பதிக்கின்றாள்
Subscribe to:
Posts (Atom)