RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அன்பு..

புரிந்துணர்வு கொண்டே
புரிந்து கொண்ட உள்ளங்கள்
பிறர் பரிந்த சொல்வதினால்
பிரிந்து செல்வதில்லை என்றும்

அகத்தினை நேசித்து - உண்மை
அன்பினை யாசித்து
அவனியில் வசிப்பவர்
அடுத்தவர் பேச்சுக்கு அஞ்சி
வஞ்சிக்க யோசிப்பதில்லை - அன்பு
நெஞ்சங்களை சோதித்து பார்க்க என்றும்

அடுத்தவர் பேச்சுக்காய்
அழியாத புனித அன்பை - நீவீர்
அடக்கி அடக்கியே தினம்
அடைமானம் வைக்காதீர் என்றும்

அன்றுதொட்டு வழங்கி வரும்
அநியாய எண்ணங்களுக்குள்
அடுத்து வரும் சந்ததியும்
அமிழ்ந்து அழியாதிருக்க
அன்பின் ஆழமதை
அகிலத்தில் பறைசாற்றும் இன்றே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment