நம்மிடம் பல குணம் - அதில்
நல்லது கெட்டது என
நாலு வகையும் உண்டு.
சொல்லிட முடியாதது சில
சிந்தைக்கே புரியாதது பல
எண்ணிடமுன்னமே
ஏதேதோ நிகழுதிங்கே....
அறிந்திட கருவியும் இல்லை
அகற்றிட மருந்தும் இல்லை
நிகழ்ந்த பின் வலிக்குது நெஞ்சம்
தஞ்சம் கொடுந்திடின் மீண்டும்
மிஞ்சுது அங்கே வஞ்சம்
கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல்
அதட்டி அடக்கிடின்
அங்கம் ஒடிந்த ஓர்
அபலையாய் அகம் துடிக்குது
புத்தியைக் கொண்டு
புலனாய்வு செய்ததில்
அறிந்து கொண்டேன்
புரிந்துணர்வு கொண்டு
பகிர்ந்து வாழ பழகுதலே
அத்தனைக்கும் அரு மருந்து...
1 comments:
உங்க கவிதை செம விருந்து ,,,
வாழ்த்துக்கள்
Post a Comment