RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

களவு

தொட்டில் பருவத்திலே
தெரியாமல் தொடங்கிறது களவு
எட்டத்தில் உள்ள எட்டாத பொருக்காய்
எத்தனிக்கும் எண்ணம்
தவிழ்ந்து செல்கையிலே
தட்டுப்படும் பொருள் எல்லாம்
தனக்கென தங்கி எடுப்பதும்
தம்மை அறியாமலே செய்யும் களவு

கண்ணில் பட்ட பொருள் எல்லாம்
பொறுக்கி வருகையிலே
எங்கிருந்து வந்ததென
எதிர்க் கேள்வி கேட்காமல்
அடிக்கி விளையாட அனுமதிக்கையில்
ஆரம்பிக்கிறது களவு

கண்டவுடன் கதறி அழ
கருத்தேதும் கூறாமல்
கடன் சொல்லி பொருள் வாங்கி
கண்ணீர் துடைந்திடும் - நிவீர்
கையெழுத்து போடுகிறீர் களவுக்கு

வீதியிலே யாரோ
தவற விட்ட பொருளை
விடலை அவன் வீட்டிற்கு எடுத்து வர
வியப்புடனே வாங்கி
விலை மதிப்பு பார்த்ததினால் - அன்று
விரட்டி விரட்டி பறிக்கின்றான்
வீதியில் செல்வோர்
விலைபுள்ள பொருளெள்ளம் இன்று

ஆடம்பர வாழ்வை எண்ணி அண்ணாந்து
அடுத்தவர் பொருள் மேல் ஆசை கொண்டு
அநீதிக்குள் மூழ்கி நீவீர்
அநாதையாய் அவஸ்தை படாதீர்

ஆசைகளை அளவாக்கி
தேவைகளை பூர்த்தி செய்து - உம்
தேவைகளால் சேகரியும் அன்பை - எக்
காலத்திலும் களவு நேராது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

arasan said...

களவுக்கு புது சாயம் பூசிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ..

ஆசைதானே அழிவுக்கு ஆரம்பம் .. அருமையான கவிதை ..

Post a Comment