அம்மா என்று நீ அழைக்க முன்பே
அன்பு முத்தம் நாம் பொழிய
ஆசையுடன் உனைத்தூக்கி
அகிலமிதை வலம் வருவோம்...
உறவுகள் எல்லாம் புடைசூழ்ந்து
உன் வாழ்வை அலங்கரிக்க
ஊதட்டினில் என்றும் புன்னகையும்
உள்ளத்தில் நல்ல வண்ணங்களும் மலர்ந்திடனும்...
பண்புடனும் பணிவுடனும் - நற்
பழக்கங்களுடனே பட்டங்கள் பலபெற்று
பாரெல்லாம் போற்றும் - எம்
பாச மகளாய் நீ திகழ்ந்திடனும்.....