RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

தீபாவளி வாழ்த்துக்கள்....

தீப ஓளியிலே இல்லம் ஓளிபெற
தீமைகள் நீங்கி உள்ளம் ஓளிபெற
தீராத தொல்லைகள் எல்லாம் நீங்கி -  நல்
தீர்வு பெற்று எம் வையம் வாழனும் எந்நாளும்...

வீண் விவாதங்களால் எழும்
விரிசல்கள் தவிர்ப்போம் எம்மிடையே
இனிமையாய் பேசியே இதயங்களோடு
இன்பமாய் வாழ்வோம் எந்நாளும்...

இந்நாள் மலரும் திருநாள் போல்
எந்நாளும் திகழ்ந்திடவே -  நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வைத்தியசாலையில்.....

அந்நியா நாட்டிலே
அடைக்களம் புகுந்த இவள்
அறிந்து கொண்ட ஓர் - புது
அனுபவம் இது........

வசதிகள் பலவுடனே
வகை வகையாய் வைத்தியம்
தனித்திருந்தாதனால்  - நானும்
தவிந்து விட்டேன் தனிமையிலே...

வலியாலே உடல் துடிக்க
மொழி புரியாது முழிமுழிக்க
ஆதாரவாய் என்னை நானே
அரவனைத்தேன் அன்புடனே - என்
அருகில் யாருமில்லா வேளைகளில்...

நோய் எதிர்ப்பு உனக்கில்லையென
தாய்வீட்டில் தனிக் கவலையெழ
காய் கறிகள் மட்டும் உண்ட  இவள்
வாய்  மருந்து என இன்று
எதை எதையோ உண்கிறதே....

உதிரம் எடுக்கையிலும்
ஊசி கையில் போடுகையிலும் இரவில்
உறக்கமின்றி தவிக்கையிலும்
உதிரும் கண்ணீருடனே ஊர் நினைவுகளும்
உருண்டோடியே கரைந்தன
கடந்த சில நாட்களாய் வைத்தியசாலையில்.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS