RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நட்பு

இறப்புக்கும் பிறப்புக்கும்
இடையிலே இடர்படும்
இன்னல்களே இவ்வுலகுக்கு
இறைவன் அனுப்பிய
இனிய தூதாம் நட்பு.

மகிழ்ச்சியும் இகழ்ச்சியும் - எம்
மனதினிலே இருக்குது
மற்றவர் கைகளில் இல்லையென
கலப்படமில்ல நம்பிக்கையூட்டும்
கருவுரு நம்பிக்கையூட்டு நட்பு.

அன்பின் அங்கமாய்
அதில் உயிர் தானுமாய்
அரவணைத்து ஆதரவூட்டியே
அகம் மகிழ்ந்து வாழ்ந்திட
அகிலமதில் அது வழிகாட்டுது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனித மனம்

நம்மிடம் பல குணம் - அதில்
நல்லது கெட்டது என
நாலு வகையும் உண்டு.

சொல்லிட முடியாதது சில
சிந்தைக்கே புரியாதது பல
எண்ணிடமுன்னமே
ஏதேதோ நிகழுதிங்கே....

அறிந்திட கருவியும் இல்லை
அகற்றிட மருந்தும் இல்லை
நிகழ்ந்த பின் வலிக்குது நெஞ்சம்
தஞ்சம் கொடுந்திடின் மீண்டும்
மிஞ்சுது அங்கே வஞ்சம்
கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல்

அதட்டி அடக்கிடின்
அங்கம் ஒடிந்த ஓர்
அபலையாய் அகம் துடிக்குது

புத்தியைக் கொண்டு
புலனாய்வு செய்ததில்
அறிந்து கொண்டேன்
புரிந்துணர்வு கொண்டு
பகிர்ந்து வாழ பழகுதலே
அத்தனைக்கும் அரு மருந்து...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS