வசந்தகால பருவமிதில்
மொட்டவிழ்ந்த மலர்கள் இவை
வாழ்க்கை என்னும் பந்தத்தில்
வாசம் வீசி இணைந்தவாம்
பரந்த இந்த பூமியினிலே
பாசம் என்னும் நீருற்றி
அன்புடனே அறம் வளர்த்து
அறுகுபோல் வேர் ஊன்றி
அருனுடன் அஜியும் சேர்ந்தே
ஆழ மரமாய் நீவிர் வாழ...
நற் சங்கதி சொல்லியே சந்ததம் பாடிட
நறுமணம் பொங்கவே - இவ்
இருமணம் இணைகின்ற
இனிய இன்நாளாய்
இனிவரும் நாட்களும் மலர
இறைவன் துணை வேண்டி
இனிதே வாழ்த்துகின்றோம்