அகிலம் இதில் நாம்
அவதாரம் காண்பதற்காய்
அந்திபகல் கண்விழித்து
ஐயிரண்டு திங்களாய்- உங்கள்
அகத்தினிலே எமை தாங்கி
அன்புதனை அமுதாக்கி - எமை
ஆளாக்கிய அன்னை வாழ்த்துகின்றோம்...
உச்சரித்தோம் முதல் முதலில்
ஓர் வார்த்தை - தன்
உதிரத்தில் எம்
உருவத்தை உருவடித்து
கருவமைத்து இவ்வுலகம்
காண வழி சமைத்த
எம் கண் கண்ட தெய்வம்
அம்மாவே உங்களை வாழ்த்துகின்றோம்...
உலகத்தில் இல்லையம்மா
உவமை சொல்ல வார்த்தைகளால்
ஊங்களுக்கு ஈடேதும்
தவழும் வயதினிலே எமை
தாய் மடியில் தாங்கி
இளமைப் பருவத்தில்
இமையாய் இருந்து துன்பம் எமை
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை மறந்தா - எம்
பெற்றோரே உங்களை வாழ்த்துகின்றோம்..
ஊங்களுக்கு ஈடேதும்
தவழும் வயதினிலே எமை
தாய் மடியில் தாங்கி
இளமைப் பருவத்தில்
இமையாய் இருந்து துன்பம் எமை
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை மறந்தா - எம்
பெற்றோரே உங்களை வாழ்த்துகின்றோம்..
ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னை தந்தையே
அனுதினமும் உங்களை - நாம்
வாழ்த்தி வணங்குகின்றோம் ......