வண்ண வண்ண மலர்களெல்லாம்
அலங்கரிக்கும் சொந்தமதில்
உள்ளப் பாசமலராய் - நீங்கள்
உதித்திட்ட இந் நன்நாளில்...
புதுவசந்தம் வீசிடவே
புறப்படும் முயற்ச்சி எல்லாம்
பூந்தென்றலுடன் இனைந்தே
புன்னகையை கொடுத்திடவும்...
இளமைக்கால தென்றலுடன்
இன்னிசையும் கலந்தே தினம்
இன்பமே உறவாக பொழுதெல்லாம்
இல்லமதில் இதம் வீச....
அன்பின் அருவுருவாய்
அன்னையின் உடன் பிறப்பாய்
அகிலமிதை அலங்கரிக்க - நீங்கள்
அவதாரித்து அகவை அறுபத்தைந்தை
அடைந்திட்ட இன் நன்நாளில்
அகம் மகிழ்ந்தே நாமும்
அன்புடனே வாழ்த்துகின்றோம்....