RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

குடும்பமதில்....


தாய் மடியில் தாலாட்டு

ஆறாத அறுசுவைகள்  
தந்தையின் செல்லம் என்ற  
அன்பான அரவணைப்பு.!

உடன் பிறப்புக்களுடனான
கூடலுடனான ஊடலிலே - சிலநேரம் 
சின்னதாய் ஒரு சண்டை
செல்லமாய் ஒருகோவம்
அன்புகலந்த கண்டிப்புக்கள்  என

ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் தினம்..!

அனைவரின் கருத்தையும்
அன்புடன் அகத்தில் கொண்டு

வரவுக்கு மிஞ்சாத செலவாய்
வாழ்க்கையைக் கொண்டு சென்று
நிறைவோடு வாழனும் இவையே 

குடும்பம்  என்னும் பல்கலையில் - நாம் 
கற்றுக்கொள்ளும் பாடங்கள்.

 குலவிளக்காம் குடும்பமதில்
அன்பென்னும் எண்ணெய்ஊற்றி
அறிவென்னும் ஒளியேற்றி
உறவுகளின் அரவணைப்பில் சங்கமமாய் 

ஆல்போல் விழுதுவிட்டு
அறுகுபோல் வேரூண்டி
வாழையடி வாழையாக
வம்சங்கள் தலைத்திடனும்........


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS