RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மண்ணிப்பு..

மனிதனைப் படைத்து அவனுள்
மனதினைப் படைத்து கூடவே
மறதியையும் படைத்தன் - ஏன்
தவறுகளை மண்ணிப்பதற்கே...

தவரென்று தெரியமால்
தடுக்கி விழுந்தவர் பலரும் - வழி
தவறி நடந்தவர் பலரும் - மனம்
திருந்தி வாழ மண்ணித்து வழி விடும்

உழைப்பினில் உறுதியும்
உள்ளத்தில் உண்மையும்
உறங்காத மனிதர்க்கு ஒருநாளும்
உதவுவதில்லை மண்ணிப்பு...

தீமையுடனே தீண்டமை அழிக்க
தண்டனை வழங்கி தலைகுனிய வைக்காது
அன்பாலே அரவணைத்து
அவர் தவறு உணரவைப்பின் - அவர்க்கு
உண்மையாய் வழா உடன்பிறப்பாய்
அருகிருக்கும்  மண்ணிப்பு...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்பை மிஞ்சி.....


உள்ளத்தின் அழத்தில்
உயிரோடு ஒன்றியே தினம் தினம்
உற்றேடுக்கும் உண்மையண்பதனலே
உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது...

விட்டுக் கொடுப்புகளால் அல்ல
வித்தியாசம் இல்லா அன்பால்
இன்ப ஊஞ்சலிலே தினம்
இதயங்கள் உலாவருது இங்கே...

ஆயுள் வரை தொடர்ந்திடும் - உன்
அன்புதனை மிஞ்சி எனக்கு
அகிலத்திலுள்ள பொருட்களிலே
அடைவதற்கு என்று எதுவுமில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இல்லறத்தில்.......

இரு உள்ளதில் பூத்த அன்பு
இறைவனின் திருவருளால்
இல்லறத்தில் இணைந்து
இன்றுடன் ஓராண்டு......

உலகொல்லாம் உறவு பெருக
உள்ளத்தில் அன்பு பெருக
உற்சாக மகிழ்ச்சியிலே - அவர்கள்
ஊதாடினிலே பூண்ணகை பொழிகிறது நாளும்....

கூடலோடே இடை இடையே
ஊடலுமே வந்து சென்றாளும்
கூட்டுக் குடும்பத்திலே - என்றும்
கூடவே இருக்கனும் இன்பம்...

இதயங்களில் அன்பு பெருக
இல்லத்தில் இன்பம் பொழிய
இன்று போல் என்றுமே இருக்க
இறைவனை வேண்டுகிறோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS