எண்ணிப்பார்க்கின்றாள்
06:46 |
எண்ணிப் பார்க்கின்றேன் -ஓ
இன்னும் இரண்டுநாள் இருக்கிறது
எத்தனை ஏற்ப்பாடுகள்
இதற்ககுள் செய்ய வேண்டும்...
உண்மையைச் சொல்வதனால்
ஊர்போல் ஒன்றுமில்லை
உறவுகளும் வந்து தங்குவதில்லை
உடல் உள உழைப்புமில்லை...
பணத்தைக் கொடுத்துவிட்டு
பந்தலில் ஊட்கார்ந்தால்
படம்பிடித்து முடித்தவுடன்
பந்தியும் முடிந்துவிடும்
அலங்காரம் ஆடம்பரம்
அதற்கு அடுத்த போலே
பாண்பாடு பழக்க வழக்கம்
இந்நாட்டு வழக்கம் இதுதான்
என்நாட்டில் வாசித்தாலும்
தரம் எனும் பதவிக்காய்
தாலிதனை ஏற்க்கும் போது
தன்நாட்டுப் பாண்பாட்டில் தளராமால்
தலைகுனிந்தே ஏற்கின்றாள்.
என் மனம்...
07:11 |
இன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்
இமைவழி வழியும் கண்ணீருக்கு
இன்னும் ஒய்வில்லையே
இதுதான் என் நிலையா?
கொடுமைகள் எதுவுமில்லை
கொடுக்கல் வாங்கள் பிசகுமில்லை
தனிமையென நானுமில்லை _ ஆனாலும்
தவிக்குதே மனசு....
விதியதன் விளையாட்டு
மனித மட்டத்தில் மட்டுமல்ல
நாட்டின் சட்டத்திலும் சூழ்ந்து
சதி செய்யுது இங்கே....
நிமிடங்களை எண்ணி எண்ணி
நீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்
நினைவுகள் களைவதற்குள் களைந்ததால்
கண்ணீரோடு கரைகின்றது என் மனம்.
Subscribe to:
Posts (Atom)