தூகலிக்கின்றது அவர்(கள்) உள்ளம் - தம்
குலம் விளக்க குழந்தையாய்
குவளையத்தில் அவதரித்த
குல விளக்கு அவள் என...
வான்பிளந்து செல்வமெல்லாம்
வாசல் வந்த மகிழ்ச்சி - இதனால்
வையத்தில் ஒவ்வொரு பெண்
பிறப்பினோடும் அவள்
நாமம் முன் சேர்கின்றது
சீர்பெருகும் செல்வி எனும் நாமம்...
அழகுசாதனமில்லாமலே
அலங்கரித்த அழகு வதனம்
சொல்லாமலே சோகத்தை கலைத்திடும்
சொல்லின் மென்மை
பொன்நகையோடு போட்டியிட்டு
பூமியில் இடம்பிடித்த
புன்னகை இத்தனையும்
பெண்மை அவள் பொக்கிசமாம்
விலை மதிக்க முடியாத
பெறுமதிகள் எத்தனையோ
அத்தனையும் தன வசமாய்
வசந்தகால புதுமலராய் - இதயத்தை
திருடியவன் உள்ளத்தில்
திடமாய் இடம் பிடித்து
புகுந்த வீட்டு வருமதியாய்
வாழ்வின் முழுமதியாய்
வையத்தில் விளங்கும் - திருமதி
இவளே அன்றைய செல்வி...