RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நல்வரவாகுக......

நாட்டினில் எங்கும்
நன்நிலை வேண்டும்
நல்லறம் எங்கும்
ஒங்கிட வேண்டும்
நம்மவர் மனங்களில்
நல் நிம்மதி வேண்டும்
நாளை மலர்ந்திடும்
நம் சமுகம்
நாளும் சிரித்து 
வாழ்ந்திட வேண்டும்-என
நல்லருள் வேண்டி
நல் வாழ்த்துக்கூறி-நானும்
நல் வருடத்தை வரவேற்கின்றேன்
வருக... வருக...என

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றியுடன் விடை கூறி...

இராறு மாதங்கள்-உன்
மடியில் எமைத் தாங்கி
வளர்த்திட்டாய் உத்தமியே
உலகத்தின் பாகங்கள் பலதினிலும்
உன் தடங்கள் பதிந்ததம்மா-உன்
பாதம் பதிந்த பாதைதனை
பாலமாய் பாவித்து-வருங்காலம்
வளமாய் வளந்திடுமே
தம் மக்கள் தம் மடியினிலே
தாமறிய செய்த பிழையனைத்தும்
தயவு கூர்ந்து பொறுத்திடம்மா-நீ
ஒராண்டு ஒயாது உழைத்ததானல்
ஓய்வெடுக்க அனுப்புகிறான்
இயற்க்கை தூதனவன் -நாமும்
இணைந்தே விடைதந்து அனுப்புகிறோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்வின் வழியில்

வாழ்க்கையின் தூரத்திலில்லை- வசந்தம்
வாழும் நாளில் இருக்கிறது
சேர்த்து வைத்து வருவதில்ல-சுகந்தம்
சேர்ந்து அனுபவிப்பதில் இருக்கிறது
பார்த்து எடுப்பதில்லை பாசம்-அது
பந்தத்தின் இனைப்பிலிருக்கிறது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்புக்காக

உன் மீது நான் கொண்டேன் கோபம்
என் மீது நீ கொண்டாய் கோபம்
பாவம் நம் நட்பு ........ யார்?
மீது  கொள்ளும் கோபம்
விட்டுவிடுவோம்

 நாம் கொண்டகோபத்தை
நம் கொண்ட நட்புக்காக ......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பந்தம்

காலத்தின் கோலத்தில்
வேலையின் வேகத்தில்-என்
கைபேசி கூட
கதை பேச மறந்தாலும்
சொல்லி வைத்த சொந்தமிது
சொர்க்கத்திலே-எவ்வளவுதான்
தள்ளி வைத்துப் பார்த்தாலும்
தவறிப் போகாது



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS