RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

குருதி தோய்ந்த எம் இனம்....




பார்க்க முடியவில்லை

பாவம் இந்த பாரினிலே - எம்

தமிழினம் படும்பாட்டை

தம்மினம் தரணியிலே

தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்

தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே

தம்முயிர் நீத்தனர்

அவர் தம் உயிர் தியாகத்தோடு

உறங்கிப் போயினவா?

தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.

சொல்ல வார்த்தையில்லை

சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக

செழிக்க வைக்க முயன்ற - எம்

இனம் முண்டங்களாகவும்

முட்கம்பிகளுக்கிடையிலும்

முகவரிகளை இழந்தும்

மூச்சு விடக்கூட திக்குமுக்காடிய

சோக கதைகள் எத்தனை...

பணத்திற்கு ஆசைகொண்டு

பகல் கனவை நிஜமாய் கொண்டு

பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்

பண்பாட்டை மாற்றும் கூட்டம்

படர்ந்து பெருகுதிங்கே..

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு

முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட

மூத்த குடி இன்று

மூர்ச்சையற்று முடங்கி போகுது

குருதி தோய்ந்த எம் இனத்தின் நிலை கண்டு...



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment