RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "



வண்ண வண்ண மலர்களெல்லாம்
அலங்கரிக்கும் சொந்தமதில்
உள்ளப் பாசமலராய் - நீங்கள்
உதித்திட்ட  இந் நன்நாளில்...

புதுவசந்தம் வீசிடவே
புறப்படும் முயற்ச்சி எல்லாம்
பூந்தென்றலுடன் இனைந்தே
புன்னகையை கொடுத்திடவும்...

இளமைக்கால தென்றலுடன்
இன்னிசையும் கலந்தே தினம்
இன்பமே உறவாக பொழுதெல்லாம்
இல்லமதில் இதம் வீச....

அன்பின் அருவுருவாய்
அன்னையின் உடன் பிறப்பாய்
அகிலமிதை அலங்கரிக்க - நீங்கள்
அவதாரித்து அகவை அறுபத்தைந்தை
அடைந்திட்ட  இன் நன்நாளில்
அகம் மகிழ்ந்தே நாமும்
அன்புடனே வாழ்த்துகின்றோம்....






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....


வானத்துச் சூரியானாய்
வண்ணமலர் ஓவியமாய்
புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்துதித்திட்ட
புத்தம் புதுமலரே...

நல் எண்ணங்கள் எல்லாம்
பல வண்ணங்களாக  உன்
வாழ்வை அலங்கரிக்க....

குழ்ந்தையாய் வந்துதித்து
குவளயத்தில் குதுகலித்திட்ட - இன்னாளில்
குலம் மகிழ்ந்து கூடி   உனை
உளமற வாழ்த்துகிறோம்
வாழ்க வாழ்க .............


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குடும்பமதில்....


தாய் மடியில் தாலாட்டு

ஆறாத அறுசுவைகள்  
தந்தையின் செல்லம் என்ற  
அன்பான அரவணைப்பு.!

உடன் பிறப்புக்களுடனான
கூடலுடனான ஊடலிலே - சிலநேரம் 
சின்னதாய் ஒரு சண்டை
செல்லமாய் ஒருகோவம்
அன்புகலந்த கண்டிப்புக்கள்  என

ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் தினம்..!

அனைவரின் கருத்தையும்
அன்புடன் அகத்தில் கொண்டு

வரவுக்கு மிஞ்சாத செலவாய்
வாழ்க்கையைக் கொண்டு சென்று
நிறைவோடு வாழனும் இவையே 

குடும்பம்  என்னும் பல்கலையில் - நாம் 
கற்றுக்கொள்ளும் பாடங்கள்.

 குலவிளக்காம் குடும்பமதில்
அன்பென்னும் எண்ணெய்ஊற்றி
அறிவென்னும் ஒளியேற்றி
உறவுகளின் அரவணைப்பில் சங்கமமாய் 

ஆல்போல் விழுதுவிட்டு
அறுகுபோல் வேரூண்டி
வாழையடி வாழையாக
வம்சங்கள் தலைத்திடனும்........


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீபாவளி வாழ்த்துக்கள்....

தீப ஓளியிலே இல்லம் ஓளிபெற
தீமைகள் நீங்கி உள்ளம் ஓளிபெற
தீராத தொல்லைகள் எல்லாம் நீங்கி -  நல்
தீர்வு பெற்று எம் வையம் வாழனும் எந்நாளும்...

வீண் விவாதங்களால் எழும்
விரிசல்கள் தவிர்ப்போம் எம்மிடையே
இனிமையாய் பேசியே இதயங்களோடு
இன்பமாய் வாழ்வோம் எந்நாளும்...

இந்நாள் மலரும் திருநாள் போல்
எந்நாளும் திகழ்ந்திடவே -  நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS