RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அன்பு..

புரிந்துணர்வு கொண்டே
புரிந்து கொண்ட உள்ளங்கள்
பிறர் பரிந்த சொல்வதினால்
பிரிந்து செல்வதில்லை என்றும்

அகத்தினை நேசித்து - உண்மை
அன்பினை யாசித்து
அவனியில் வசிப்பவர்
அடுத்தவர் பேச்சுக்கு அஞ்சி
வஞ்சிக்க யோசிப்பதில்லை - அன்பு
நெஞ்சங்களை சோதித்து பார்க்க என்றும்

அடுத்தவர் பேச்சுக்காய்
அழியாத புனித அன்பை - நீவீர்
அடக்கி அடக்கியே தினம்
அடைமானம் வைக்காதீர் என்றும்

அன்றுதொட்டு வழங்கி வரும்
அநியாய எண்ணங்களுக்குள்
அடுத்து வரும் சந்ததியும்
அமிழ்ந்து அழியாதிருக்க
அன்பின் ஆழமதை
அகிலத்தில் பறைசாற்றும் இன்றே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

களவு

தொட்டில் பருவத்திலே
தெரியாமல் தொடங்கிறது களவு
எட்டத்தில் உள்ள எட்டாத பொருக்காய்
எத்தனிக்கும் எண்ணம்
தவிழ்ந்து செல்கையிலே
தட்டுப்படும் பொருள் எல்லாம்
தனக்கென தங்கி எடுப்பதும்
தம்மை அறியாமலே செய்யும் களவு

கண்ணில் பட்ட பொருள் எல்லாம்
பொறுக்கி வருகையிலே
எங்கிருந்து வந்ததென
எதிர்க் கேள்வி கேட்காமல்
அடிக்கி விளையாட அனுமதிக்கையில்
ஆரம்பிக்கிறது களவு

கண்டவுடன் கதறி அழ
கருத்தேதும் கூறாமல்
கடன் சொல்லி பொருள் வாங்கி
கண்ணீர் துடைந்திடும் - நிவீர்
கையெழுத்து போடுகிறீர் களவுக்கு

வீதியிலே யாரோ
தவற விட்ட பொருளை
விடலை அவன் வீட்டிற்கு எடுத்து வர
வியப்புடனே வாங்கி
விலை மதிப்பு பார்த்ததினால் - அன்று
விரட்டி விரட்டி பறிக்கின்றான்
வீதியில் செல்வோர்
விலைபுள்ள பொருளெள்ளம் இன்று

ஆடம்பர வாழ்வை எண்ணி அண்ணாந்து
அடுத்தவர் பொருள் மேல் ஆசை கொண்டு
அநீதிக்குள் மூழ்கி நீவீர்
அநாதையாய் அவஸ்தை படாதீர்

ஆசைகளை அளவாக்கி
தேவைகளை பூர்த்தி செய்து - உம்
தேவைகளால் சேகரியும் அன்பை - எக்
காலத்திலும் களவு நேராது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்வி - திருமதி


தூகலிக்கின்றது அவர்(கள்) உள்ளம் - தம்
குலம் விளக்க குழந்தையாய்
குவளையத்தில் அவதரித்த
குல விளக்கு அவள் என...

வான்பிளந்து செல்வமெல்லாம்
வாசல் வந்த மகிழ்ச்சி - இதனால்
வையத்தில் ஒவ்வொரு பெண்
பிறப்பினோடும் அவள்
நாமம் முன் சேர்கின்றது
சீர்பெருகும் செல்வி எனும் நாமம்...

அழகுசாதனமில்லாமலே
அலங்கரித்த அழகு வதனம்
சொல்லாமலே சோகத்தை கலைத்திடும்
சொல்லின் மென்மை
பொன்நகையோடு போட்டியிட்டு
பூமியில் இடம்பிடித்த
புன்னகை இத்தனையும்
பெண்மை அவள் பொக்கிசமாம்

விலை மதிக்க முடியாத
பெறுமதிகள் எத்தனையோ
அத்தனையும் தன வசமாய்
வசந்தகால புதுமலராய் - இதயத்தை
திருடியவன் உள்ளத்தில்
திடமாய் இடம் பிடித்து
புகுந்த வீட்டு வருமதியாய்
வாழ்வின் முழுமதியாய்
வையத்தில் விளங்கும் - திருமதி
இவளே அன்றைய செல்வி...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் மனம்..


செய்தி கேட்ட கணம் முதல்
சொல்ல முடியாத ஆனந்தத்தில்
துள்ளி்க் குதிக்குது அவள் உள்ளம்

உடன்பிறப்பின் வருகைக்காய்
உதிக்கின்ற கணம் ஒவ்வொன்றும்
காத்திருந்து காத்திருந்து
உருண்டோடிய இரண்டு ஆண்டுகளால்
உறைந்திட்ட அவள் உதிரத்தில் - இருந்து
ஓர் உற்சாற்கம் உற்றொடுத்து
அவள் உடல் எங்கும் பாய்கின்றது.

பாசமதை தினம் தினம்
பாசமாய் வீசும் நந்தவனமதில்
வாசம் செய்த இவள்
தூரம் வந்தினால் - மீண்டும்
நெருக்கிட்ட ஆனந்தத்தில்
நீச்சல் அடிக்குது அவள் மனம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவன் அன்பால்...

அன்பு அது அகத்தில் பெருக
அகம்பாவம் ஒழிந்ததினால்
விட்டுக் கொடுப்புக்கு
கட்டுப்பாடு சிறிதும் இன்றி
தாராளமாய் கிடைக்கிங்கு

வஞ்சமில்ல நெஞ்சமதில்
கஞ்சமில்லா அன்புதனை
பஞ்சமின்றி பொழித்ததினால்
வஞ்சி அவள் வாழ்வில் - என்றும்
தஞ்சம் நீ எனவே
நெஞ்சில் தலை சாய்த்தாள்

பாசத்தால் அரன் அமைத்து
புரிந்துணர்வால் காவல் செய்து
ஈருடல் ஓர் உயிராய் - இங்கு
உருவாக்கிய உயர் இராச்சியத்தால்
வெற்றி வாகை சூடினாள்
வாழ்க்கை என்னும் இலட்சியத்தில்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS