RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அகரம்...


அன்னை மடியினிலே
அவதரித்த நாள் முதலாய்
அறிகின்றேன் பாரினிலே
அர்த்தங்கள் பல கொண்ட
அலைமோதும் அசைவுகளை

அனைத்து உயிர்க்கும்
அம்மா என்பது முதல் வார்த்தை - அதில்
அழகு தவழுது தனியாக
அன்பு பெருகுது
அணை போட முடியாமல்

அர்த்தமே காண முடியாத
அதிசய பொருட்கள் பலவாம்
அறிவும் அதில் ஒன்றாம்
அநியாயங்கள் பல நடக்குது - அதை
அடங்கவும் முடியவில்லை
அழிவை நாடிச் செல்ல
அவர்கள் தேடிச் சென்று
அயராது உழைக்கும் வழியது

அசைகின்ற பொருள் தொடங்கி
அசையா பொருள் வரையும்
அகிலத்தில் அனைத்திலுமே
அகரம் நடத்துதே
அரசாட்சி இங்கே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவளின் வருகைக்காக......

தெருவோரம் செல்கையிலே
வழியோராம் நின்றவளை
விழியோரம் கண்டதினால்
மனதோரம் - ஒரு வருடல்
என் வாழ்க்கை துணையாக வருவாளா

கண்களிலே கணை தொடுத்து
காற்றினிலே காதல்
செய்தி சொல்லி - அவள்
காதோரம் அனுப்புகிறேன்

மூச்சு காற்றில் கூட அவள்
முகவரியை தேடிச் செல்ல
மனம் அங்கேயே
மண்டியிட்டு நிக்கிறது
கண்ணில் கலந்து
உணர்வில் உறைந்த
மங்கை உருவை - என்
மனைவி எனும் உறவாக்க...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பணத்துக்காய்.....

புலம்பெயர் நாட்டிற்கு
புறப்பட்டு வந்தவரே-நீவீர்
பயணிக்கும் பாதையிலே
பள்ளங்கள் பலவிருக்கும்

பகலிரவு பாராமல்
பந்த சொந்தம் தேடமல்
பண்பாடு தனை மறந்து
பணத்துக்காக பறக்கின்ற
பலர் இங்கே...

சுற்றத்தார் மத்தியிலே
சுமையேதும் தெரியாமல்
சுகந்திரப் பறவையாய்
சுற்றித்திரிந்த உறவுகளே

சொர்க்க பூமியென நம்பி
சொந்தங்கள் துறந்து
சேர்த்து வைத்த சொத்தெல்லம்
செலவழித்து வந்த உறவுகளே

காலம் காலமாய்
கடந்து வரும் கொடுமையிது
உரிமைக்கு உணர்வில்லை
உறவுக்கு துணையில்லை
பணத்துக்காய் பக்கம் சாரும்
பகல் திருடர் மத்தியிலே
பாசத்தைப் பார்ப்பதெங்கே

காலத்தின் பாதையிலே
கடல் தாண்டி வந்தவரே
கஸ்டங்கள் பல கண்டு
கண் கலங்காதீர்
கடமைதனை கருமமாய் செய்து-நல்ல
காலம் வருமென காத்திருப்பீரே

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எண்ணம்....

அன்பு கொண்ட நெஞ்சங்களே
ஆசைகள் பல வளர்த்து
இணைந்து சொல்லும் வழியில்
ஈடேற்றம் கண்டிடவே
உயர்வை நாடியே
ஊனுரக்கம் இல்லமால்
எண்ணமதை செயலாக்கி
ஏற்றம் பல கண்டுவிட்டால்
ஐயமின்றி சொல்லுகிறேன்
ஒளிரத் தொடங்கும் உம் வாழ்வு
ஓங்கியே செழிக்கும் என்நாளும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிடிவாதம்......

குழந்தைப் பருவத்தே- தாய்
கூடவே இருந்திட
குழறி அழுதிடும்-குழந்தையின்
குணம் பிடிவாதம்

எட்டியடி வைக்கையிலும்
ஏடேடுத்துப் படிக்கையிலும்
எதிர்படும் பொருட்கள் எல்லாம்
எனக்கே உரியதேன எண்ணிடும்
எண்ணமது பிடிவாதம்

காலை எழுந்து கடமைதனை முடித்து
கல்வி கற்க செல்ல
கள்ளமது உள்ளமையால்
கையிலில்ல பொருளுக்காய்
கால் குத்தியழும் பிடிவாதம்

கட்டிளமைப் பருவத்திலே
காளையரும் கன்னியரும் காட்டிடும்
கணக்கற்ற கள்ளத்தனங்கள்
காலத்தால் கூட
கட்டுப்படுத்த முடியாத பிடிவாதம்

ஆறு மாதம் முதல் தொடங்கி
ஆறுபது வயதுக்கு மேலும்
ஆறறிவு தொடங்கி-ஓர்
அறிவு வரையும் இந்த
அகிலத்திலே எங்கும்
அழியாது தொடருது பிடிவாதம்

நிலையற்ற இவ் உலகில்
நீர் குமிழி எண்னங்களை
நீங்கி விட்டு
நினைத்ததை முடிப்பதற்காய்
நிஜமாய் உழைக்கும் நெஞ்சங்களே-உம்
நினைவுகள் நீண்ட தூரம் பயணிக்க
நீவீர் கொள்ளும் பிடிவாதம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS