RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

என் மனம்...



இன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்
இமைவழி வழியும் கண்ணீருக்கு
இன்னும் ஒய்வில்லையே
இதுதான் என் நிலையா?

கொடுமைகள்  எதுவுமில்லை
கொடுக்கல் வாங்கள் பிசகுமில்லை
தனிமையென நானுமில்லை _ ஆனாலும்
தவிக்குதே மனசு....

விதியதன் விளையாட்டு
மனித மட்டத்தில் மட்டுமல்ல
நாட்டின் சட்டத்திலும் சூழ்ந்து
சதி செய்யுது இங்கே....

நிமிடங்களை எண்ணி எண்ணி
நீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்
நினைவுகள் களைவதற்குள் களைந்ததால்
கண்ணீரோடு கரைகின்றது என் மனம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புதல்வன்....



உறவுப் பாலத்தின் ஓர் தொடராய்
ஊர்பல தாண்டி வந்து
உதித்திட்ட உதய சூரியனே-  உனை
உச்சி முகர்கின்றோம்.

உறவுக்கு உரம் சேர்க்க
உன் வரவுக்காய் காத்திருந்த
உள்ளங்கள் அத்தனை பேர்
ஊதட்டிலும் பூத்தது புன்னகை.

தந்தை தாய்க்கு தலைமகனாய்
தலைமுறை தலைத்திட
தரணியிலே தடம்பதித்த
தவப்புதல்வனே  நீ......

பலகலையும்  கற்று
பாரெல்லாம் போற்றும்
பண்புகள் நிறைந்த - நல்
புதல்வனாய் திகழ வாழ்த்துகின்றோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உம்கையில்....




சொல்லத் தயக்கமா அல்ல- அவள்
செயலால் கலக்கமா
உள்ளத்தில் தாக்கமா எது -அவள்
ஊதட்டை தடுக்குது....

எண்ணத்தை மறைக்கலாம் - முகத்துக்கு
வண்ணமும் பூசலாம்  வாழ்க்கைச்
சின்னத்தின் உதயத்தை
என்னத்தில் மறைப்பது..

பிழை ஒன்றும் இல்லை -  இங்கே
கிளையதன் வளர்ச்சியை
விலை கொடுத்து வாங்குவதல்ல
நிலைதடுமாறாது உரம்வாய்ந்த
வேராய் இருப்பின் நீவீர்
விழுது ஏதும் தேவையில்லை...

வாழ்க்கையின் பாதையில்
நம்பிக்கையுடன் நம்பிக்கால்வைத்து
இடுக்கையை உதைப்பது
உம் கையிலுள்ளது என்றும்...

தன்நம்பிக்கையுடன்
அயாராது உழைத்து -  மனம்
தளராது வாழின்  -  உமக்கே
வாழ்க்கையின் வசந்தம்
தரனியில் என்நாளும்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முயற்ச்சிக்கின்றேன்



தெரியதா  மொழி
அறியதா மனிதர்-ஆனாலும்
மரியாதை அதிகம் ஆதலால்
புரியதா பலதையும்
புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...

பட்டங்கள் பலபெற்று
பதவிகள் பல வகித்தாலும்
சட்டங்கள் எமங்கு
சார்பாக இருந்தாலும்-வாழ்க்கை
கட்டங்கள் பலதாண்டி
கடமையை சரியாக செய்ய
தெரியதா மொழியைத்
தெரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...

சுற்றுகின்ற பூமியிலே
சுமை நிறைந்ததல்ல வாழ்க்கை
சற்று நின்று சிந்தித்து செயற்பாட்டால்-அதன்
பசுமைதனை நாமும்
கற்றுக் கொள்ளலாம் என்பதனால்
நானும் முயற்ச்சிக்கின்றேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் இராச்சியத்தில்...


விழிகளில் விழுந்து
மூச்சினில் கலந்து
மனதினில் தவழ்ந்து
இதயத்தில் இடம் பிடித்து
காதலால் ஆட்சி செய்யும்
உன் இராச்சியத்தில் -என்றும்
நான் இளவரசியே...

காதல் எனும் தேர்வெழுதி
கடமைதனை ஏற்ப்பதற்காய்
தடம் பதித்திட்ட தேசம் வாழ்
காதலரே கேளீர்...

கண் காணும் சில காட்சிகளோ
பிறர் சூழ்ச்சிகளோ -இன்றி
நல்  மனச்சாட்சியோடு ஓன்றி
இல் ஆட்சியை நடத்தின் -உம்
காதல் இராச்சியத்தில்
தரணியும் இணையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS