RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

விடுமுறை

ஓடி ஆடிப் பாடிக்கும் பாலரும்
ஒயாது  உழைக்கும் காரங்களும்
ஓய்வாக அம்ர்ந்து உலகத்தை ரசித்து
ஓன்றாக உண்பதற்கே விடுமுறை....

நேரத்துக் ஏற்ப நேசத்தை பகிர்ந்து
தேசங்கள் பல சென்று - தம்
சேகத்தை மறந்து - நிறைந்த
பாசத்தை படரவிடும் உறவுகள் பல...

விதியின் எல்லையினை அறியாது
விழிமுடித் தூங்காது
விடிய விடிய உழைத்து - வாழ்க்கை
விளங்க முன்னே வடிய உயிர்கள் பல...

உலகத்திலுள்ள உயிகள் எல்லாம் -தம்
உள்ளக் கவலைகள் மறந்து
உல்லாசமாக உறவுகளுடன்
உலாவரும் காலமே விடுமுறை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க்கை வழி......

தொலை தூரம் சென்றதானல்
தொலைந்து போவதில்லை உறவுகள்
தொடர்பினை தொடர முடிய பற்பல
தொல்லைகளில் அவர்கள் நிலை

தெரியதா மனிதர்கள்
புரியதா மொழி அத்தனையும்
அறிந்து கொள்ளும் ஆவலில்
பறந்து திரியும் மனிதர்கள்

தேசங்கள் பல தாண்டி
தேகத்தை வருத்தி அவர்கள்
காலத்தோடு ஓட்டி வாழா படும்
கஸ்டங்கள் தான் எத்தனை

வாழ்க்கையின் ஒவ்வரு படிக்கும்
வரி வரி என விதிக்கும் அரசு மத்தியில்
விதியினை வெல்ல மனிதர்_ இங்கே
மதியோடு போடுகிறார் போட்டி

உண்மைதனை உணர்ந்து கொண்டால்
உறவுகளுக்கிடையிலில்லை விரிசல்
உலகில் எங்கிருந்தாலும் உண்மைஅன்பு
உள்ளத்தில் நிலைத்திருக்கும் என்றும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பே உன் வயதென்ன!


 நட்புக்கு வயதுண்டா
 வயது முதிர்ந்து
 வாலிபம் விடைபெற
முதுமை வறவேற்க
மூப்பு தொடர்கிறது
உடலுக்கு துணைசேர்க்க
உறவானது  ஊன்றுகோல்
கண்பார்வை மங்கி
காது மந்தமாகி
உணவு செரிக்க முடியாத நிலையிலும்
உன் நினைவுகள் செரிக்கிறத
என் தோழனே....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS